Saturday, January 26, 2013

ஏந்திழையள் செவ் இதழில்


மார்கழி பனியிலே எம் வெட்கத்தின்
மொழி அறியாமல் மெதுமெதுவாய்
எனை நிரப்பி சென்றவனே ............

தத்தை யென சுற்றி வந்த எமை
நத்தை யென ஊறவைத்த நந்தனே
உம் வித்தை முடியயின்னும் நாளாகுமோ ?!!!!

மலர் பூட்டிய எம் கார்குழலில்
தேன் அள்ளிய ஏந்தலே ...........

ஏந்திழையள் செவ் இதழில்
செய்யுள் எழுதிவிட்டீரோ .........
வண்டினம் தமிழ் படிக்க தவம் புரிகிறது !!!
இமைக்கும் பொழுதினிலே யெம்
உடலை உழவு செய்யும் உழவனே ............
எம் பாதம் தொட்ட மண் கூட மலர்ந்து விட்டது

உம் உள்ளத்திலே யாம் மலர்ந்து யிருப்பதால் !!!!!
வேல்விழியாள் விழிகளுக்குள்
உனை யெப்படி பதியம் யிட்டாய்

எங்கு நோக்கினும் உம் வதனம் மலர்கிறதே !!!!
மையலில் மயிலின் விழியிலே
கவியெழுத காத்திருக்கும் கவிஞனே
என்னிடத்திலே நான் எனை யிழந்து விட்டேனடா
சட்டென உமது வித்தையை முடித்து கொள்ளும்
பித்தாகி விடுவாள் பாவம் பேதை !!!
காதலுடன் பூங்குழலி !!! 

No comments:

Post a Comment