Monday, December 24, 2012

அத்த மக..!!




அனிச்சம் பூச்சூட்டி உன் அத்த மக
நான் காத்திருக்கேன்
அடிமேல அடிவச்சு ஆசையா பூத்திருக்கேன்
கறுத்த விழியழகா என்ன
பார்வையில கடையிறியே
செவத்த உதட்டழகி சிக்கிப்புட்ட உன் மீசையில!!!!

வாய்சொல்லில் பேரழகா
என் மாமன் பெத்த கருப்பழகா
மச்சினி என்னை தொட்டுப்பார்க்க
மருண்டு வழிக்கும் முழியழகா!!!

தெத்து பல்லு பேரழகி உன்ன
நெறச்சுபுட்ட மனசுக்குள்ள
தாமர தெப்பத்துல நான்
தலைமுழுகி நிக்கயில
நான் குளிச்ச தெபபதுல
நீ நனைய ஆசைப்பட்ட!!!!

காத்திரு ஆச மச்சான் கதிரும்
கருத்த வெளைஞ்சிருக்கு
சந்தையில வித்துப்புட்ட
அடுத்து நம்ம கண்ணாலம்தான்
ரெட்ட மாடு வண்டிகட்டி சீர்வரிசை காத்திருக்கு

காதலுடன் பூங்குழலி !!!!!!



No comments:

Post a Comment