Thursday, February 28, 2013

சுமக்க முடியா நம் காதலின்



மறக்க முடியாத நாட்களை
எனக்குள் தந்துவிட்டு
சுமக்க முடியா நம் காதலின் நினைவுகளை நானறியா வண்ணம்
விழியில் மறைத்து நீ கையசைத்து சென்ற
நிமிடங்களை கண்ணீரால் 
துடைத்து கொண்டே யிருக்கிறேன் !!!!!

காதலுடன் பூங்குழலி !!


எனை ஏங்கவும் வைக்கிறாய்



காற்றில் அசைந்தாடும் கொடிமுல்லையாய்
சுருள் சுருளான கேசத்துக்குள்ளே
நின் விரல்கள் புகுந்தோடும் வேலையிலெல்லாம்
நித்திரை இழந்த நிலவாய் தேய்ந்து விடுகிறேன்

கயிறாக திரித்த கூந்தலிலே முடிச்சிட்டு
முத்தம் ஒன்று கொடுக்கையிலே
முழுதும் பற்றி எரியும் சூரியனாய் ஜொலிக்கிறேன் 

வெடித்து சிதறிய காதலுடன் மார்பில் சாய
தேற்ற முடியாமல் நீயும் எனைபோலே
கட்டி அணைத்து கதறி நிற்க 

சிறகு முளைத்த சடைகளுடன்
சிந்தை இழந்தவளாய்ஆயிரம் முறை
நினைத்து பார்த்துவிட்டேன் !!!!

எனை ஏங்கவும் வைக்கிறாய்
தேங்கவும் வைக்கிறாய்!!!!!

காதலுடன் பூங்குழலி !!! 

காதலெனும் சுனாமியாய் வந்து





காதலெனும் சுனாமியாய் வந்து என் 
உயிர்றெடுத்து உடல் மட்டும் விட்டு சென்றாய்
உயிர் விடுத்தது நிற்கிறேன்
வந்தால் வாழ்வேன்உயிர் கொண்டு
உன்னோடு இல்லையெனில்
கல்லாய் சமைகிறேன் உன் நினைவுகளோடு !!!!
என்னவனே எனை மறந்து நெடுங்காலம் ஆன பின்பும் 
அலையடிக்கும் என் நினைவு கடற்கரையில் 
பதிந்திருக்கும் உன் கால் தடம் அருகில்
இன்றும் நீ இல்லாமலே தனிமையில்
உறங்கபோகிறேன்!!!

காதலுடன் பூங்குழலி..!!!


Thursday, February 21, 2013

மெல்ல மெல்ல எட்டி பார்க்கும் நிலவு




மெல்ல மெல்ல எட்டி பார்க்கும் நிலவு மகளின்
காதலில் இரவுமகன் மூழ்கியிருப்பது போலே
உன் நினைவுகளில் சிக்கி தவித்திருக்கிறேன் தனித்திருக்கிறேன் !!!!!!!

உள்ளத்தை களவு கொள்ளும் தென்றலின் ஸ்வரங்களாய் என்றோ
நீ காதருகே வெப்பமாய் உளறி கொட்டிய 
வார்த்தைகளை தேடி பார்க்கிறேன் !!!!!!!

நீயும் எனைப்போலே தொலைத்த காதலை தேடிக்கொண்டிருப்பாய்
எனும் நம்பிக்கையில் மெய்மறந்து துயிலுகிறேன் எங்கோயிருக்கும் 
உன் அன்பான அரவணைப்பில் இன்பமாக !!!!!

காதலுடன் பூங்குழலி
 —

Wednesday, February 20, 2013

வீர வணக்கம்


மண்ணில் விதைத்து விண்ணில்
மலர்ந்த மலரோ
நின் ஆன்ம அமைதிபெற வேண்டும் யென
பிராத்திக்கும் தகுதி கூட எமக்கு இல்லை !!!!

பூங்குழலி ........... 

Saturday, February 16, 2013

கவிதை தோட்டம்

காத்திருக்கும் பூங்குழலி


சிக்கி தவிக்கிறேன் உன் நினைவு களில்
இருள் கவிழ்ந்த இரவுகளில் உன் மார்ப்பு கதகதப்பில்
எனை மறந்து உன் அங்கத்தில் ஓரங்கமென..

விடியும் வரை உன் மார்பிலே தலைசாய்த்து நனுறங்கிய
 நிமிடங்கள் நத்தையாக செல்கிறதட !!!!!!

நாமிருவரும் நடந்து சென்ற கடற்கரையோர
சாலையிலே நம் சென்ற கால்தடம் தேடி
நடக்கிறேனட
என் உயிரெனும் வீணையில் கட்டிய
காதலை மீட்டி சென்றாவன் நீயோருவன் மட்டுமே !!!!

நீ விலகி சென்ற பின்னும் மழை கண்ட காளானை போலே 
முளைத்து கொண்டிருகிறது உன் நினைவு
என் நீண்ட இரவுகளில் நீயில்லாமல்
வாழ்ந்துவிட 'துணிவு' எனக்கில்லை..!!!

எதிர்மறையோடு நான் சண்டை யிட்டாலும் ..
சண்டை முடிந்த மூன்றாவது நிமிடத்தில்
ஒரு முத்தத்தோடு என் முசுடுகளை வெட்டி எரிந்து
கட்டி அணைத்து செல்ல கோபக்காரி என்று முடிதுவைப்பாய் !!!!

இன்றும் காத்திருக்கிறேன் உன் அணைப்பிற்கு
இனி வரமாட்டாய் யென்று அறிந்த பின்னும் !!!!!

காத்திருக்கும் பூங்குழலி !!!!!


சுவாசமானவனே


சுவாசமானவனே எனை நீ கொஞ்சிய போதும்
உனை நான் மிஞ்சியபோதும்
உனை நான் தூண்டிய போதும்
எனை நீ தீண்டிய போதும்
அறியாத நம் காதலின் வீரியத்தை
உன் வார்த்தைகள் இல்ல இரவுகளில்
எனை வாட்டி எடுத்த போதுதான்
உணர்ந்து கொண்டேன்
எனக்கே என்னை நிழலாகியவனே
இனியும் ஒரு நொடிக் கூடா உன்
வார்த்தைகள் யின்றி என்னால் வாழ இயலாதடா!!!!

காதலுடன் பூங்குழலி !!!!

Tuesday, February 12, 2013

Feel My Love..




காற்றோடு கைக்கோர்த்துக்
சுழன்றடிக்கும் பெரும்மழையில்
முழுதும் நனைந்தபடி நானும் நியும்
நம்மிருவரையும் பார்த்தப்படி நிலவும் வானும் !!!!

நீர் சொட்டும் என் கேசம்தடவி
நிலம் நோக்கும் என் முகம் தூக்கி
நம் காதலின் பிரிவை கண்களில்
எழுதிய இனியவனே நீ மறந்தாய ? !!!

அன்று அடைமழையில் நனைந்தபடி
யாரும்மற்ற தெருவில் கரம்பிடித்தபடி
நானறியாத ஒருநொடியில்
என் உச்சியில் இதழ்ப்பதித்து
உயிராக இருப்பாயா நான் வாழும்
காலமெல்லாம் யென விழிநோக்க !!!

மலைநீரோடு என் கண்ணீரும்
உன் கைநனைக்க பதறியபடி
எனை அணைத்தாய் சற்றே
நாணத்தோடு மெல்ல விலகினேன் !!!!!!

இன்றும் கண்ணில் நீரோடு நிற்கிறேன்
ஏனோ அணைக்க மனமின்றி நீயும்
அணைக்க மாட்டாய யென நானும் !!!!!

காதலுடன் பூங்குழலி !!!

Wednesday, February 6, 2013

தரணிக்கு உணவளிக்க ஏர்ப்பிடித்தவன்




தரணிக்கு உணவளிக்க ஏர்ப்பிடித்தவன்
கையின்று கல்லுடைக்கிறது
கேணியில் குளித்தவன் தெருக்குழாயில்

தான் விதி நொந்து குளிக்க பழகிவிட்டான்
கோணிக்குள் உறங்கினாலும்
சொந்த மண்ணிலே

உலகம் மறந்து உறங்கியவன்
தெரு ஓரத்திலே உறங்க பழகிவிட்டான்

விடியலுக்கு முன்னே உலகம் காண பழகியவன்
இன்று கதிரவன் உச்சிக்கு வந்த பின்னும்

கண்விழிக்க மனம் இன்றி கிடக்கிறான்
சொந்த மண்ணுல காலுவைக்க
பொங்கல்வரை காத்திருக்கான்

குலசாமிக்கு பொங்கல் வைக்க மட்டும்
விவசாயி இவனை இயற்கையின் வறட்சி
ஏழ்மைக்குள் தள்ளிவிட்டதா ?
சோம்பேறி ஆக்கிவிட்டதா ?

நட்புடன் பூங்குழலி !!!

என் செல்ல அம்மா



சிற்பிகொரு சித்திரமாய் 
கவிஞனனுக்கொரு கருவாய்......

தந்தைக்கு மகளாய்
தமையனுக்கு தமைக்கையாய்....

தோழருக்கு தோழியென
காதலுனுக்கு காதலியாய்.....

கணவனுக்கு மனைவியாய்
குழந்தைக்கு அன்னையென....

சிலருக்கு விருப்பபட்டவளாய்
சிலருக்கு விருப்படதவளாய்.....

பாத்திரம் நிரப்பும் நீரென வடிவம்
மாறிக்கொண்டே இருக்கிறேன்

ஆனால் என் அன்னையே
உனக்கு மட்டும் இன்னும் நான் மழலையாய்
இருப்பதன் காரணம் நானறியேன் !!!!!

காதலுடன் பூங்குழலி !!!


Monday, February 4, 2013

நிஜத்தை இழந்து நிழலாகி


நீ என் உதயமா அஸ்தமனமா ?
அறியாமலே தொடர்கிறேன் உன் பாதத்தை!!!

அனுமதியில்லாமலே உன்னை 
அணைத்து பிடிக்க எனை 
அறியாமல் எண்ணம் கொள்கிறேனடா !!!

உன்னை அள்ளிப்பருக ஆசைகொண்டு
யுகங்களை கடந்து உன் பின்னே
வந்துவிட்டேன் கானல் நீராகி விடாதே !!!

என் விடியலாய் இருப்பாய் என்று
உன் விழிநோக்கி நிற்கிறேன் விழி மூடிவிடாதே...
இருண்டுவிடும் என் வானம் !!!

நிஜத்தை இழந்து நிழலாகி
விட்டேன் வந்துவிடு இல்லையெனில்
காற்றோடு கலந்து உன்னை தீண்ட அனுமதிகொடு!!!!!

காதலுடன் பூங்குழலி !!!