Tuesday, December 25, 2012

பொன்னியின் செல்வன்


மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் எனது கற்பனையும் 

வந்தியத்தேவன், ( நடிகர் விஜய்)
எதற்கும் துணிந்தவன் 
துடிப்பான இளைஞ்சன்
துரு துரு வாலிபன்
வாய்சொல்லில் வீரன்
நல்ல நகைசுவை உன்னர்வுடையவன்
அவசர குடுக்கை
அஞ்சா நெஞ்சன்
அசட்டு காதலன் 

           
அருள்மொழிவர்மன், ( நடிகர் மகேஷ் பாபு )
(ராஜா ராஜா சோழன்)

ஈடு இணை இல்லா வீரன்
பேரழகன்
வேகம் விவேகம் இரண்டும் தெரிந்தவன்
புத்தி கூர்மையானவன்
கதை நாயகன்
பொன்னியின் செல்வன்
ராஜ ராஜ சோழன்
( இவர் ஒரு பொருத்தமான தேர்வு )
                          என் கருத்து......


குந்தவை, நடிகை சினேஹா
வீர தமிழ் அரசி
ராஜராஜனின் தமைக்கை
ஆதித்த கரிகாலனின் தங்கையும்
வந்தியத்தேவன் காதலி
ராஜ ராஜனுக்கு அன்பு பாசத்துடன் வீரத்தையும்
ஊட்டி வளரத்த பெண் 


ஆதித்த கரிகாலன் ( நடிகர் விக்ரம் )
ராஜ ராஜனுக்கும் 
குந்தவைக்கும் அண்ணன்  
சோழர்களின் தலை சிறந்த 
வீர அரசன் 


பழுவேட்டரையர், ( நடிகர் சத்தியராஜ் )
பெரிய பழுவேட்டையர்
கிழடடு அனால் சிங்கம்
சோழர் நாட்டு தானதிகாரி
நந்தினி தேவியின் கிழடடு கணவர்
சோழ ராஜியத்தை பிளக்க நினைத்த
சதிகாரர்களில் ஒருவர் 


நந்தினி தேவி ( நடிகை அனுஷ்கா )
பெரிய பழுவேட்டயாரின் ஆசை நாயகி
பழுவூர் இளையராணி
அமரர் கல்கியால்
செதுக்க பட்ட மிக முக்கியமான பத்திரம் இது
பேரழகி என்ற வார்த்தைக்கு சொந்தக்காரி
 பாம்பின் விஷத்தைவிட  கொடியவள்
இவளின் அழகிற்கு மயங்காதவறே இல்லை
பாண்டியனை கொன்றதற்காக சோழர்களை
பழிவாங்க துடிதவலாக
பொன்னியின் செல்வனில் சொல்ல பட்டுள்ளது
( வீரம் அழகு இரண்டும் கலந்த ஒரு பாத்திரம் )
என்னை பொருத்தவரை குந்தவையய்விட
இந்த வேடதிர்க்குதான் அனுஷ்கா மிக கட்ச்சிதமாங்க
பொருந்துவார் 

ஒரு முறை ரஜினி கூறுகையில்
படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி பாத்திரம்
" இந்த நந்தினி தேவியை "
மனதில் வைத்துதான் உருவாக்க பட்டது என்றார்
           

ஆழ்வார்க்கடியான் ( நடிகர் நாசர் )
வைஷ்ணவர் 
சோழர்களின் தலை சிறந்த 
ஒற்றர்களில் ஒருவன் 
இவனுக்கு வந்தியதேவனுக்குமான 
கட்சிகள் மிகவும் ரசிக்கும் படி 
நகைசுவையுடன் அமைத்து இருப்பார் கல்கி  

பூங்குழலி ( நடிகை திரிஷா )
ஓடக்காரனின் மகள் 
மிக துணிச்சல்காரி
துரு துரு பெண்
வந்தியதேவனை கடலுக்குள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்தவள்
பொன்னியின் செல்வனை ஒருதலையாக காதலிப்பவள்
இனிமையாக பாடக்கூடியவள்
என்று சித்தரிக்க பட்டுளால் 












உலகில் உள்ள பெண்களே…



உலகில் உள்ள பெண்களே…
உரைப்பேன் ஒரு பொன்மொழி…
காதல் ஒரு கனவு மாளிகை…
எதுவும் அங்கு மாயம் தான் …
எல்லாம் வர்ணஜாலம் தான்…
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே…


Monday, December 24, 2012

சிவந்த பாதங்களில்


சிவந்த பாதங்களில் கொடியென
படர்ந்திருக்கும் சலங்கையில் கோர்த்திருக்கும்
முத்துகளும் உம் பெயரையே கவிபாடி கொண்டிருகிறது...!!

ஏந்திழையின் நதியென வளைந்தாடும் சிற்றிடையை
பற்றியிருக்கும் உம் மென் கரமோ ஒட்டியணாம் ?
நங்கை யெம் மடல் களில் ஆடும் காதணியும்
உனை நினைத்தே பதம் பிடிக்கறது..!!

சிறகுக் கைகளைசிலிர்த்தாடும் யெம் விரல்களும்
உம் நினைவுகளை முத்திரையை
பதித்து விடுகிறது யெனை அறியாமல்
நிதமும் காற்றில் கலந்திருக்கும்..!!

உம் நினைவுகளோடு ஆடிகொண்டடிருக்கும்
எம் விழிகளில் உமை விதைத்து விட்டு
இமை மூட சொல்வது நியாயமா ..??

காதலுடன் பூங்குழலி ...


 பொன்னியின் செல்வன்


அழியாத அழகிய நுலை நெய்த நெசவாளி திரு.கல்கி கிருஷ்ண மூர்த்தி இந்த பட்டயத்திற்கு அழியாத வண்ணம் கொடுத்தவர் திரு.மணியம்,
திகட்டாத தமிழிலே படைக்க பட்டு தமிழுக்கு பெருமை சேர்த்த காவியம் 

ஆம் அதுதான் தமிழின் மிக சிறந்த வரலாற்று நாவல்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது பொன்னியின் செல்வன் ...
ஏழு வருடங்கள் கடந்து விட்டன இருப்பினும்,

என் மனம் எனும் கர்ப்பப்பையில் இறக்கி வைக்க
முடியாதக் கருவாக ஒரு காவியம் நிலைத்திருக்கிறதென்றால்
அது ‘பொன்னியின் செல்வன்’தான்....

ஒரு தாய் எப்படி தன் குழந்தையின் குறும்புத் தனங்களை பிறரிடம் கூறி மகிழ்வாளோ அதுபோல, கல்கி எனும் எழுத்தாளன் பெற்றெடுத்த குழந்தையை இன்று வாசகர்கள் தஙகளது மடியின் மீது தவழவிட்டு,
அது புரியும் லீலைகளை மற்றவர்களிடம்

உவகையோடு பகிர்ந்துக் கொண்டு வருகிறோம்
இது கல்கியின் கற்பனையோ காவியமோ
எதுவாக இருந்தாலும் சரி அதில் வசிக்கும் பாத்திரங்கள் 

வந்தியத்தேவன்,
அருள்மொழிவர்மன்,
(ராஜா ராஜா சோழன்)
பூங்குழலி ,
குந்தவை, 
ஆதித்த கரிகாலன்
பழுவேட்டரையர்,
நந்தினி தேவி
ஆழ்வார்க்கடியான் 
அனைவரும்
என்னை சுற்றி இருப்பது போலே இன்று வரை ஒரு எண்ணம் இவர்கள் அனைவரையும் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆவல் உண்டாகிவிட்டது உண்மை நிகழ்வுகளோடு அங்கங்கு கதை சேர்த்து கல்கி பிணைத்திருக்கும் இக்காவியம் என்றும் படித்தவர் அனைவர் மனதிலும் வாழும்.

இக்காவியத்தை நான் என்றும் அனைவருக்கும் பரிந்துரைப்பேன்
இதுவரை 5 முறைகள் பொன்னியின் செல்வனை படித்து விட்டேன். ஒவ்வொரு தடவையும் புதிய புதிய விஷயங்களோடு நம்மை எதிர் நின்ற‌ழைக்கும் காவியம் ‘பொன்னியின் செல்வன்’....

இந்த புத்தகம் படித்த பிறகு தஞ்சாவூர் மற்றும் இலங்கை போய் ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் என்று கட்டாயம் அனைவருக்கும் தோன்றும்.!!!!!

நட்புடன் பூங்குழலி...

காதலெனும் மத்து




உம் சொல்லடி பட்டு சிதறி கிடக்கும்
எம் மனக்கண்ணாடிகளெல்லாம்
உம் பிம்பத்தையே பிரதிபலிகிறது
வேர்பிடித்து ஊன்றி விட்ட நம் நேசத்தை
வெட்டிவிட வழியின்றி தவிக்கிறேன் ...!!

நெளிந்தோடும் நதியலை போலே
எமக்குள்ளே வளைந்தோடும் உம் நினைவுகள் எனை
நித்திரையின்றி நெருப்பிலிட்டு கொண்டிருகிறது ...!!

காதலெனும் மத்து கொண்டு எனை கடைந்து
எம் உடல் விடுத்து உயிர் மட்டும் எடுத்து சென்றமாயமென்ன
யுகமாகி போனாலும் உமக்காக காத்திருப்பேன்
யெனும் நம்பிக்கையில் தானோ ...!!

உம் வேஷமற்ற பாசம் நானறிவேன்
மாயமாகி போன மாயவனே மறக்காமல் வந்துவிடு
வரும் வரை நானிருப்பேன் வெறும் கூ டு கொண்டு உயிர் தின்றவனே
எம் கார் கூந்தலிலும் கவிதை யெழுத காத்திருந்த
காதலை சிதைத்து விடாதேயும்...!!

காதலுடன் பூங்குழலி....

காத்திருக்கிறாள் உம் அன்னை

கவிதை ஒன்றை எழுதிவைத்து 
காத்திருக்கிறாள் உம் அன்னை !!!



புது மஞ்சள் மணக்க பிறை நிலவு கீற்றை போலே
பூத்த உனை எம் உதிரம் எனும் மலர் தூவி

ஈரைந்து மாதங்கள் எமக்குள்ளே உனை
பொதிந்து கண்துஞ்சாமல்
காத்திருபேனடி எம் கண்மணி !!!!

கருவறை யெனும் இருட்டறையில்
எம் உயிரெனும் அகல் விளக்கேற்றுகிறேன்
அன்னையிவள் பொன் வளையல்
ஓசை கேட்டு துயில் கொள்ளடி செல்லமே !!!!

வான் நிலவு தடம் மாறி உன் கருவறையில்
குடியேறி விட்டதடி என்று நகைக்கிறார் உம் தந்தை
ஏனெனில் நீர் என்னுள் பூத்ததும்
பொன்னெடுத்து பூசியது போலே
எம் மேனியின் வண்ணம் மாறிவிட்டதாம் !!!!

எம் செல்வமே நிறமற்ற மனிதர்கள் நிறைந்திருக்கும்
உலகம் காண அச்சம் வேண்டாமடி
தன் தோள் தந்து நமை காக்க உம் தந்தை இருக்கிறார் !!!!

உனை காண தன் உயிர் பிடித்து
காத்திருக்கிறாள் உம் பாட்டி
தன் வீட்டு மஹாலக்ஷ்மி வரும் நாளை எண்ணி
கனவுகள் பல காண்கிறார் உம் தாத்தா
மரப்பாச்சி பொம்மையாய் மாறி
உன்னோடு விளையாட நானிருக்கிறேன் !!!!!

உரமிடப் படாமலே யாம் காதலுடன் காத்திருப்பது
உம் தந்தைக்காக மட்டுமல்ல உனக்காகவும் தான்
எமக்குள் நீ வராமலே உமக்காய் கவிதை
ஒன்றை எழுதிவைத்து காத்திருக்கிறாள் உம் அன்னை !!!

தாய்மையுடன்  பூங்குழலி

ஓர் பனிசிந்தும் பௌர்ணமி இரவு


ஓர் பனிசிந்தும் பௌர்ணமி இரவு



ஓர் பனிசிந்தும் பௌர்ணமி இரவிலே
கரைதாண்டி செல்கின்ற வெள்ளமாய்
அடங்காத நாம் காதலை நிலவுமகள்
மறைந்திருந்து காண!

எம் மரகத மூக்குத்தியை கலங்கரை
விளக்காய் வெய்த்து நீர்
எமக்குள் முத்தெடுக்க இறங்கிவிட
அந்திச்சிவப்பு செவ்வானத்தின்
அன்றாட பூப்பாய் யாம் மலர்ந்துவிட!

பிறை போன்ற நெற்றியிலே உம் இதழ் பதித்து
இமை மூட தென்றலும் தழுவ மறந்து தடம் மாறியதோ
கடல்கண்ட நதியாய் அலைபாயும் கார் கூ ந்தல்.
உம் மார்ப்பில் தஞ்சம் கொள்ள…!

கொடியிடையோ உம் இடையில் படர்ந்திருக்க
நரம்பு புடைக்க உனை யென்னுள் இறக்கி 
பெருகும் வியர்வையை எமக்குள்ளே விதைத்து விட்டீர்!

அந்தபுரத்து வண்டினமும் பூவினமும் யெம்
காதல் கண்டு வாஞ்சை கொள்ளும்வேளையிலே
புரவிகனைத்து உம் கடமையுணர்த்த
பிரிய மனமின்றி யெம் கண்ணீரை
உம் மார்பில் விதைத்துவிட !

விழி நீருடன் யெனை விடுத்து நீர் விலகிய நிமிடங்கள்
பலநுறு ஜென்மங்களை கடந்துவிட்ட பினும்
யின்னும் முள்ளாய் எம் நெஞ்சில் !

காதலுடன் பூங்குழலி !


மையல் கொள்ள எண்ணமும் இல்லை...

நீயின்றி யாரிடமும் மையல்
கொள்ள எண்ணமும் இல்லை...





உனையன்றி யாரிடமும் என்
மனம் கொடுக்க ஆசையில்லை

நீயின்றி யாரிடமும் மையல்
கொள்ள எண்ணமும் இல்லை

நீ வரும் வரை காத்திருப்பேன்
உன் உயிர் சுமக்க என் உயிர் கொடுத்து

என் கூந்தலின் மணம் உன் மார்பை
மட்டும் சேரவேண்டும் என்று
தலையணை இல்லாமல் உறங்குகிறேன்

நீ தலை சாய்த்து ஓர் ஓர பார்வை பார்க்கும் பொழுது எல்லாம் நான் விரும்பியே உன்னுள் என்னை தொலைத்து விடுகிறேன்

பூக்கும் பூவாய் என்னை தழுவும் கற்றாய்
உன் மீதான என் காதல் வளர்ந்து கொண்டே இருக்கிறது

என்ன செய்ய உடனே என்னுள் உன்னை புதைத்துவிடு
இல்லையெனில் என்னை மண்ணில் புதைத்துவிடு

நான் எழுதும் எல்லா வார்த்தைகளிலும்
நீ வந்து நிரம்பிவிடுகிறாய் நீ இல்லையெனில்
என் கவிதை மட்டுமல்ல நானும்
இல்லை

மறுதலித்து ஓர் வார்த்தை சொல்லிவிடு
இன்றே நாங்கள் மரிக்க தயார்

காதலுடன்
பூங்குழலி

உன் தழுவலில் நான் சிவக்கிறேனோ



காந்தமான நேரத்திலே ஈரா முகிலுக்காய்
காத்திருக்கும் மயிலை போல என் ஏக்கங்கள்
எல்லாம் சேர்த்துவைத்து காத்திருக்கிறேன் உனக்காக !!!
உன் காதலை என்னுள் மழையாக நீ தூவ
அதை நான் மட்டும் வாங்கும் நிலமாக 
ஆசைப்படுகிறேன் !!!

பால் நிலவை தங்கும் மேகத்தை போல
என் பருவத்தை உன்னுள் புதைக்கவே
உயிர் உருகி பார்த்திருக்கிறேன் !!!!!

என் வதனத்தில் பூத்திருக்கும்
செண்பக பூவை போன்ற இதழில் வண்டாக மாறி
நீ தேன் அருந்தவே பூத்திருக்கிறேன் !!!!!

உன் தழுவலில் நான் சிவக்கிறேனோ
இல்லையோ ஒவ்வொரு முறையும்
உனக்காக கவிதை எழுதும் பொழுது
சிவந்து விடுகிறேன் எனை அறியாமல் !!!!!

நாணமெனும் ஆடை உடுத்தி
உன்னோடு கலந்திடவே இமை
துஞ்சாமல் காத்திருக்கிறேன் !!!!!!
வெட்கத்துடன் பூங்குழலி !!!