Thursday, March 28, 2013

அம்மா...




என் அன்னையை குறித்த பதிவு  எழுதும் அளவிற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை? எனினும் எழுதுகிறேன் என் உடலும் உயிர்ரும்  அவளுடையது  என்பதால் தவறு இருந்தால் மன்னியுங்கள் .

நான் சந்தித்த முதல் பெண்ணியவாதி  என்னுடைய தாயார், ஒரு ஆண் குழந்தைகளுக்கு இடையே இரண்டு பெண் குழந்தைகளை
முழுமையான வாய்ப்புகளோடு அவர் வளர்த்தார், ஆண் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளும் பெண் குழந்தைக்கும் கிடைக்க வேண்டும் என்ற புரிதலோடு அவர் இருந்தது எனக்குள் வளரும் காலத்தில் வியப்பைக் கொடுத்தாலும்,
ஒரு வெற்றிகரமான பெண்ணாக என்னையும் என் சகோதரியை மாற்றியதில் அவருடைய பங்கு முழுமையாக இருந்தது.

கணவன் மனைவி உறவும் ,பெண் ,எந்த நிலையிலும் ஒரு ஆணுக்கு அடிமையில்லை ஆணும் பெண்ணும் உயிரும் உடலும் ஒன்று இல்லாமல் ஒன்று இல்லை என்பதை
என் தாய் தந்தையரின் இடையே நான் கண்டறிந்த மிகப்பெரிய உண்மை.

பெண் சுதந்திரம் என் அன்னையின் பார்வையில் தன் கணவனை பொறுத்தே இருந்தது . தன் யுத்தத்தை கூட நாங்கள் அறியாவண்ணம் மௌனமாய் நடத்தும் ஒரு தேர்ந்த வீராங்கனை என் அன்னை .அதிகம் படிக்காதவர் என் தந்தை மரித்த அந்த நொடி வரை வெளி உலகம் தெரியாத மனுஷி ,தான் கணவரின் இறப்பிற்கு பின் உலகை எதிர் கொள்ள அவர் துணிந்து நின்ற அந்த நிமிடம் இன்னும் எங்களால் மறக்க முடியாது.



தைரியம் தன்னம்பிக்கை எதை இரண்டையும் தனது 30 வயதில் தான் கற்றுக்கொண்டார் . ஓர் நாணலை போலே குடும்பத்திற்காக தனை மாற்றிக்கொண்டவர் . இன்பம் துன்பம் இது இரண்டையும் ஒரே மனதில் புதைத்து எங்களின் நலனிற்காக புன்னகையுடன் வலம் வருவது இன்னும் நிறைய விஷயங்களில் எங்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கு கொண்டு சென்றவர் .

அவரை பொறுத்தவரை பெண்ணியம் என்பது "வாழும் காலத்தில் எனக்குக் கிடைக்கிற அல்லது கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிற எந்த வாய்ப்பும் என் சக தோழிக்கும் கிடைக்க வேண்டும்" என்பதுதான் . எனது தந்தையின் விருப்பபடியே எங்களை வளர்த்து சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் எங்களை நிறுத்தி இருக்கிறார் .

உன் மனதின் எண்ணப்படி நீ செயல் படு வெற்றி நிச்சயம் உனை தேடிவரும் என்று சொல்லி வளர்த்த என் அன்னையின் 48 வது பிறந்த நாள் நாளை, அவருக்கு பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் இல்லை என்றாலும் என் உள்ளத்தில் உள்ளதை இங்கு பகிர்ந்து இருக்கிறேன் .

அன்னையே உனைப்போலே வெற்றி பொற்ற , எல்லாராலும் விரும்பப்படும் பெண்ணாக நான் இருகிறேன தெரியவில்லை ஆனாலும் இன்றுவரை முயற்சிக்கிறேன் . இந்த உலகிற்கு எனை அறிமுக படுத்திய அன்னையே நாளை நானும் என் கணவனாலும் குழந்தைகளாலும் விரும்பப்படும் பெண்ணாக வேண்டும் .

நன்றி அம்மா !!!!

பூங்குழலி !!!

Wednesday, March 27, 2013

மாணவர்கள்


நாம் விதைத்திருப்பது நல்லதோர்
விதைதான் (மாணவர்கள்)
முட்டி மோதி முளைத்துவிட்டது
விண்ணை தொடுவது திண்ணமே
நாங்கள் காத்திருக்கவில்லை விடியலுக்காய்
விடியல் காத்திருக்கிறது எங்களுக்காய்
ஒரு இசை பிரியா உதிர்ந்து ஓராயிரம்
இசையாய் ஒலிக்க தொடங்கிவிட்டாள்
நிச்சயம் வெல்வோம்
நட்புடன் பூங்குழலி !!!!

விழிமுடிய சிலையென்று




ஓலமிடும் கடற்க்கரை யோரம்
பசுமஞ்சள் தனை பூசி பொன்மேனி கொண்ட
தங்கசிலை கோதையொருத்தி.....
தணல்போன்ற மணல்மேலே தனைச் சாய்த்து
காத்திருந்தாள் உம் வருகைக்கு
வண்டுடைக்கா பூவென
காற்றணைக்கா தேனென
நிலம் தழுவா மழைத்துளி யென பூத்த
பூவையை உம் ஓரவிழி பார்வையாலே
உயிர்க்காடு பற்றியெரிய செய்துவிடுகிறாய்

விழிமுடிய சிலையென்று உம்
சில்லென்ற மார்பினிலே சிதற
என்னுள் வேர் விட்ட வேந்தே
நிலவு முகத்தரசிநெற்றியிலே
இதழ் பதிக்க இன்றேனும் நீர் வருவீரோ

காதலுடன் பூங்குழலி
 

Thursday, March 21, 2013

இனி ஒரு விதி செய்வோம்


புத்தக சுமையை சுமந்து பல 
வித்தகங்கள் கற்றவர்கள் புரியாத
உலகத்தின் சூட்சமங்களை உணர்ந்து
பயணத்தை தொடங்கிவிட்டோம்

இருட்டில் கிடக்கும் எம் இனத்தை
அழகாக செதுக்கி ஜொலிக்கும்
முத்துக்களாக மாற்றும் வரை ஓயமாட்டோம்
சிறு தீப்பொறி என்று எண்ணிவிடவேண்டாம்
சிதறினால் நாங்கள் பட்ட

இடமெல்லாம் பற்றி எரியும்
உயிர் கொடுத்து இனம் காக்க
உறுதி பூண்டிருக்கும் மாணவ செல்வங்களின்
போராட்டம் வெற்றி பெறவேண்டும்

இவர்களுடன் சேர்ந்து போராடும்
வாய்ப்பு இல்லை எனினும் எனது முகபுத்தகம் வாயிலாக
சில கவிதைகள் எழுதியதே
எனக்கு பெருமையாக
உள்ளது

நன்றியுடன் பூங்குழலி


Wednesday, March 20, 2013

காதலுடன் பூங்குழலி



இல்லாத இடை கொண்டு
இலக்கியங்கள் நானெழுத
எம் இதயத்தை ஆட்கொண்டு
இப்பொழுதை உனதாக்கி
பசியாற காத்திருக்கும்
என் காதல்
பாவலனே

பாவையிவள் செங்கழுத்தில்
பொன் நாண்
பூட்டி
செவ்விதழில் செந்தமிழ்லேந்தி
கடைக்கண்ணில் காதல்
மின்ன
கருவிழியில் வாளேந்தி
கைகளிலே பனிப்பூவேந்தி
மேனியெல்லாம் மருதாணி நிறம் தாங்கி

உம் கவிதையிலே
கருத்தாகி
கனவினிலே சுந்தரியாய்
உம் காதலிலே காவியமாய்
மென்மையிலே தென்றலை போலே
எம் பெண்மை தாங்கி
மேகநிலவின் மோகம் தாங்கி
தவிக்கின்ற உம் நெஞ்சினிலே
யாம் தஞ்சம் கொள்ள வேண்டும்
நீர் வாளெடுத்து வெல்வீரோ
இல்லை எம் விழி வில்லில்
வீழ்வீரோ

காதலுடன் பூங்குழலி 

Sunday, March 17, 2013

முகநூல் புறகணிப்பு -18-03-2013





18-03-2013
என் இனத்திற்காகவும், தமிழீழத்திர்ககவும்
இன்று ஒரு நாள் முகநூல் புறகணிப்பு 




Tuesday, March 12, 2013

அந்த மூன்று நாட்கள்


சிட்டு குருவியாய் சிறகடிக்கும் எனை
முடக்கிவிடுகிறது அந்த மூன்றுநாள்
வேதனை
இருக்கையிலே அமர்ந்து நெளிந்து
கொண்டிருக்கும் போதுதான் தோன்றுகிறது
சோ! ஏன் பெண்ணென்ற பிறவிகொண்டாய்..?

மூன்றோ, ஐந்தோ யென நீளும் தினங்களில்
தனியிடம் விட்டு வாசற்படி வந்துவிட்டால்
அன்று ஒரு ருத்ரதாண்டவம் அடிவிடுவாள் அம்மா
என் கைப்பட்ட இடமெல்லாம் கழுவி
வசைபாடி முடிந்தபின்தான் உறங்க செல்லுவாள்

அப்பொழுது எல்லார் கண்களுக்கும்
நானோர்
பிச்சைக்காரியாக
வேடமிட்டு நிற்ப்பது போலொரு பிரமை
பிரளயம் எனும் சொல் வயிறுக்குள் தாண்டவம் ஆட
நனைந்து கனத்த பஞ்சை போலே
கனத்து விடுகிறது
நெஞ்சமும்

மூன்று நாள் வேஷத்தில் நானிருக்க
என் முகம் கூட மறந்திருக்கும் என் கணவனுக்கு
சட்டம் வந்துவிட்டது எல்லாச் சாதியும்
கோயிலுக்குள் வர.எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவணுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை என்ன
செய்ய

எனை கொண்டு மண்ணில் புதைத்தால்
மறுபடியும் வெளி வந்து எனை அறியாமல்
என் கால்கள் என் வீடு நோக்கியே பயணிக்கும்
எனை வெறுப்பவர்களும் அணைபவர்களும்
அங்குதானே
இருகிறர்கள்

நான் வேண்டும் இவர்களுக்கு நானில்லையெனில்
என் கணவனின் சுற்றும் பூமி நின்றுவிடும்
என் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்
வடிவம் பெற மண்ணாய் இவர்களுக்கு நான்
என் வாழ்க்கையை இதுவரை ஒருமுறைக்கு
கூட நான் வாழ்ந்தது
இல்லை

நட்புடன் பூங்குழலி !!!!

மடிவேன் உன் மடி மீது




உயிருக்குள் வைத்து பூட்டிவிட்டேன்டா உனை 
வந்தால் வாழ்கிறேன் உன் மார்மீது
இல்லையெனில் மடிகிறேன் உன் மடிமீது
இனி உன் நிழலையும்
கூட
இழக்க திறனில்லை
எனக்கு

காதலுடன் பூங்குழலி !!!!

Monday, March 11, 2013

விண்மீன்கள் வானில் விளகேற்றும் நேரம்


இளங்காலை பொழுதினிலே
பொன்னி நதிக்கரையினிலே 
காத்திருக்கும் குழலியின்
இவள் விழியிரண்டை
பறித்து மறைந்த மாயவனே
எம் மனம் உமக்கொரு பிருந்தாவனமோ? !!!!

காற்றோடு குழல் கொள்ளும் காதலாய்
நின் மனதோடு எம் உயிர்சேர்த்து
இசைக்கும் பொழுது
கரைந்து மறைந்து விடுகிறேன் !!!!

விண்மீன்கள் வானில் விளகேற்றும் நேரம்
மாயவனின் மார்மீது விழிமூட வேண்டும்
சந்தனசிலையிடம் அந்தி கலைக்கு நீர்
விளக்கம் அளிக்க யாம் மயங்கி உருக !!!!!

வண்டாடும் வனம் எந்தன்
இதழ்லென்று நீர் வந்தாடும் நேரம்
எனை வென்று நயனமாடும்
ஒரு நவரச நாடகம் நளினமாக
இங்கு அரங்கேற வேண்டும் !!!

தணியாத தாகங்கள் யெனக்கு கொடுத்து
மறைந்த மாயவனே மழை கொண்ட
முகிலேனவே உம் வானில்
யான் பொழிய யுகமாக காத்திருக்கிறேன்
உடையென்று எம் இடைமீது நீர் பற்றி படர
எம் தவிப்பும் துடிப்பும் அடங்க எமை வந்து
ஆட்கொள்ளவேண்டும் எம் மாயவனே !!!!!

காதலுடன் பூங்குழலி !!!!

Wednesday, March 6, 2013

மழை

                                                                    
                                                                                           Coming Soon...

Tuesday, March 5, 2013

சங்கம் கொஞ்சும் செய்யுள் யாம்



ஓங்குமலை மீதினின்று பாய்ந்துவரும் அருவிபோலே
இமைக்க மறந்த
விழிகளுடன்
என்னவனையும்
உன்னை அணைக்க வேண்டி

மை தீற்றிய கண்களிலே மெய்க்காதல்
எழுதி வைத்து காத்திருக்கும் உன்னவளை
ஒரு கணம்மேனும் பார்வையால் தீண்டிசெல்லடா

அன்னமும் நாணும் நடைப்பையிலும் மாலையிலே
நங்கை
இவள் கொய்தது மலரை மட்டும்மல்ல
மாயவா உன் மனதையும் தான்

சங்கம் கொஞ்சும் செய்யுள் யாம்
உன்னுள்ளே சங்கமிக்கும் மங்கையும்
யாம் 
மைவிழி பூங்குழலி
கைவளை இசைப்பதும்,
தொள் தமிழ்
இறைப்பதும்,
நின்னடி சேரவே

உனையன்றி யாரெனக்கு..???
உயிர்தந்து
உறவாட..??

தென்றலோடு தென்றலாய்
தீண்டலோடு
கூடலாய்
உன்னோடு கலந்திடவே
காத்திருக்கேன் தனிசோலை இவள்

காதலுடன் பூங்குழலி !!!!

Sunday, March 3, 2013

மழைக்காற்றே மழைக்காற்றே



மழைக்காற்றே மழைக்காற்றே 
என் மன்னனனை காண்பாயோ
அவனின்றி இங்கே நான் படும்
வேதனை சொல்வாயோ

நிலவில்லா வானம் போல் நிதமும் 
தவிக்கின்றேன் தனிமையிலே
மணமில்லா மலரை போல்
மலர்கின்றேன் உன்னாலே

பாறைக்குள் வேர்விட்ட செடிப்போலே 
முளைத்து விட்டாய் என்னுள்ளே
உனை இழக்கும் வலுவின்றி 
உடைகின்றேன் தன்னாலே

பனியாக இருக்கும் என்னை 
அணைப்பாயோ என் சூரியனே 
நீ வருகின்ற தடம் பார்த்து 
காத்திருப்பேன் மாயவனே !!!!

காதலுடன் பூங்குழலி !!!