Thursday, March 28, 2013

அம்மா...




என் அன்னையை குறித்த பதிவு  எழுதும் அளவிற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை? எனினும் எழுதுகிறேன் என் உடலும் உயிர்ரும்  அவளுடையது  என்பதால் தவறு இருந்தால் மன்னியுங்கள் .

நான் சந்தித்த முதல் பெண்ணியவாதி  என்னுடைய தாயார், ஒரு ஆண் குழந்தைகளுக்கு இடையே இரண்டு பெண் குழந்தைகளை
முழுமையான வாய்ப்புகளோடு அவர் வளர்த்தார், ஆண் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளும் பெண் குழந்தைக்கும் கிடைக்க வேண்டும் என்ற புரிதலோடு அவர் இருந்தது எனக்குள் வளரும் காலத்தில் வியப்பைக் கொடுத்தாலும்,
ஒரு வெற்றிகரமான பெண்ணாக என்னையும் என் சகோதரியை மாற்றியதில் அவருடைய பங்கு முழுமையாக இருந்தது.

கணவன் மனைவி உறவும் ,பெண் ,எந்த நிலையிலும் ஒரு ஆணுக்கு அடிமையில்லை ஆணும் பெண்ணும் உயிரும் உடலும் ஒன்று இல்லாமல் ஒன்று இல்லை என்பதை
என் தாய் தந்தையரின் இடையே நான் கண்டறிந்த மிகப்பெரிய உண்மை.

பெண் சுதந்திரம் என் அன்னையின் பார்வையில் தன் கணவனை பொறுத்தே இருந்தது . தன் யுத்தத்தை கூட நாங்கள் அறியாவண்ணம் மௌனமாய் நடத்தும் ஒரு தேர்ந்த வீராங்கனை என் அன்னை .அதிகம் படிக்காதவர் என் தந்தை மரித்த அந்த நொடி வரை வெளி உலகம் தெரியாத மனுஷி ,தான் கணவரின் இறப்பிற்கு பின் உலகை எதிர் கொள்ள அவர் துணிந்து நின்ற அந்த நிமிடம் இன்னும் எங்களால் மறக்க முடியாது.



தைரியம் தன்னம்பிக்கை எதை இரண்டையும் தனது 30 வயதில் தான் கற்றுக்கொண்டார் . ஓர் நாணலை போலே குடும்பத்திற்காக தனை மாற்றிக்கொண்டவர் . இன்பம் துன்பம் இது இரண்டையும் ஒரே மனதில் புதைத்து எங்களின் நலனிற்காக புன்னகையுடன் வலம் வருவது இன்னும் நிறைய விஷயங்களில் எங்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கு கொண்டு சென்றவர் .

அவரை பொறுத்தவரை பெண்ணியம் என்பது "வாழும் காலத்தில் எனக்குக் கிடைக்கிற அல்லது கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிற எந்த வாய்ப்பும் என் சக தோழிக்கும் கிடைக்க வேண்டும்" என்பதுதான் . எனது தந்தையின் விருப்பபடியே எங்களை வளர்த்து சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் எங்களை நிறுத்தி இருக்கிறார் .

உன் மனதின் எண்ணப்படி நீ செயல் படு வெற்றி நிச்சயம் உனை தேடிவரும் என்று சொல்லி வளர்த்த என் அன்னையின் 48 வது பிறந்த நாள் நாளை, அவருக்கு பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் இல்லை என்றாலும் என் உள்ளத்தில் உள்ளதை இங்கு பகிர்ந்து இருக்கிறேன் .

அன்னையே உனைப்போலே வெற்றி பொற்ற , எல்லாராலும் விரும்பப்படும் பெண்ணாக நான் இருகிறேன தெரியவில்லை ஆனாலும் இன்றுவரை முயற்சிக்கிறேன் . இந்த உலகிற்கு எனை அறிமுக படுத்திய அன்னையே நாளை நானும் என் கணவனாலும் குழந்தைகளாலும் விரும்பப்படும் பெண்ணாக வேண்டும் .

நன்றி அம்மா !!!!

பூங்குழலி !!!

5 comments:

  1. aakkam nanru.
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  2. இனிய வாழ்த்துக்கள் நாயகி கிருஷ்ணா.. உங்கள் படைப்புகளை அதிகம் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete