Thursday, January 31, 2013

அப்பா


வெற்றி கொண்டு மகிழ்ந்த போதெல்லாம்
உனை எண்ணியதே இல்லை எம் மனம்
தோல்வி கொண்டு தனிமையில்
விடப்பட்ட போது மட்டும்
உம் அரவணைப்பை தேடுகிறது ஏனெனில்
எனை உணர்ந்த முதல் ஆணல்லவா நீர்
கரம் பிடித்து நடைப்பழக கற்றுதந்தீர் இன்று
தானாய் நடக்கிறேன் ஏனோ
என் கரம் உம்மை தேடுகிறது
ஆயிரம் பேர் எனை சுற்றி ஆதரவாய் நின்றாலும்
எம் சிரம் உம் தோள் தேடுகிறது
மனம் இல்லாதவர்களின் இடையே எனை
தனிமையில் விட்டு சென்ற என் தந்தையே
எம் மனதில் உம் இடம் நிரப்பா யாரும் இல்லை

இப்படிக்கு உம் மகள்
பூங்குழலி !!!

Monday, January 28, 2013

உன் ஸ்பரிசத்தில் உயிர் தேனா?


உன் நெருக்கத்தில் எனை மறந்தேனா ?
உன் விலகலில் மரித்தேனா ?
உன் ஸ்பரிசத்தில் உயிர் தேனா?
என ஆயிரம் கேள்விகள் யெனை
அடைக்காதாலும் மொழிந்து கொண்டே இருக்கிறேன்
எதுவாயினும் எனக்கு உன்னைமட்டும் பிடிக்கும்
நிஜம் தேடி அலைந்த என் முன்னே
நிழலாய் வந்து நிஜமாகியவன்
நீ ஒருவன் மட்டும் என்றேனும்
உன் எண்ண ஓட்டத்தில் எனை காண நேர்ந்தால்
ஓடிவா நீ எனைவிட்டு சென்ற
உன் மனவாசலிலே காத்திருக்கிறேன் !!!!!

காதலுடன் பூங்குழலி !!!!

உலகநாயகன்



நான் எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல்
இருக்கலாம் ஆனால் இது என் கருத்து அதை பதிக்கிறேன் . 

தமிழ் சினிமாவில் புது புது டெக்னாலஜியுடன் 
ஈடு கொடுத்து ஓடக்கூடிய ஒரு மிகச்சிறந்த வலிமை 
வாய்ந்த குதிரை திரு.கமலஹாசன் .

பல வருடங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளிவந்த 
ஹேராம்,குணா ,போன்ற படம் பார்த்துவிட்டு புரியவில்லை
என்றவர்கள் இன்று அதை விரும்பி பார்கின்றார்கள் , 


இன்று ஏற்று கொள்ளகூடிய ஒரு விஷயத்தை பனிரெண்டு 
வருடங்களுக்கு முன்னே சொல்லிவிட்டார் திரு.கமலஹாசன் .

இன்று அவருக்கு விஸ்வருபமாகிவிட்டது அவரது 
விஸ்வருபம் திரைப்படம் போர்க்கொடி தூக்கி 
போராடவேண்டிய படமல்ல விஸ்வருபம் ,

இதில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க 
பட்டிருபதாக நாம் கோவம் கொள்வதும் முறையல்ல 
ஆப்கான் தீவிரவாதம் பற்றிய 

படங்களை ஆங்கிலத்தில் நிறைய பார்த்துவிட்டோம்
இன்னும் வரும் அதையும் நாம் பார்ப்போம் என்பதில்
மிகையெதும் இல்லை அது போன்ற ஒரு சாதாரண தீவிரவாத 
பாடம் தான் விஸ்வருபம் .

இதில் அவர் ஒரு முஸ்லீமாக தன்னை காட்டி இருக்கிறார் அவ்வளவே .

மதம் எனும் மூன்று சொல்லை மட்டும் வைத்து கொண்டு
பிரச்சனைகளை பெரியதாக காட்ட வேண்டிய 
அவசியம் இதில் தேவையில்லை என்றே தோன்றுகிறது .

கமல் தனது அணைத்து படைப்புகளிலும் புதுமையை 
புகுத்துவதுதான் ஒரு சிலர் தங்களது சொந்த பிரச்சினைகளுக்காக 
ஓர் சிறந்த படத்தை வெளியிட தடுப்பது முறையில்லை .

இத்தனை எதிர்ப்புகளையும் முறியடித்து விஸ்வருபமாய் 
திரைப்படம் வெளிவருமா ??????


நன்றியுடன் பூங்குழலி !!!!

Saturday, January 26, 2013

அடங்கலையே யெம் மனசு



அடிச்சடிச்சி சொன்னாலும் அடங்கலையே
யெம் மனசு சிலுத்துக்கிட்டு எம் பேச்சை கேக்காம சிட்டா பறக்குதையா  
ஒத்த வழி பாதையெல்லாம் ஒன்னத்தேடி
என்னுசுரு அலையா அலையுதைய்யா !!!!
பல்லிடுக்கில் சிக்கிகிட்ட மொளகா வெத போல
என்னுசுருடுக்கில் மாட்டிகிட்டு உசிரெடுக்க பாக்குறியே கண்ணுக்குள்ள வெதச்ச காதல் நெஞ்சுக்குள்ள
மொளச்சுக்கிட்டு பேயாட்டம் ஆடுதைய்யா !!!!
எம்மோட சீவனயெடுத்துக்கிட்டு
உம்மோட உசிர கொடுத்து விட்ட
ராசாவே நீ எம்புட்டு ஈர மனசுக்காரனைய்யா !!!!
காதலுடன் பூங்குழலி !!!!

ஏந்திழையள் செவ் இதழில்


மார்கழி பனியிலே எம் வெட்கத்தின்
மொழி அறியாமல் மெதுமெதுவாய்
எனை நிரப்பி சென்றவனே ............

தத்தை யென சுற்றி வந்த எமை
நத்தை யென ஊறவைத்த நந்தனே
உம் வித்தை முடியயின்னும் நாளாகுமோ ?!!!!

மலர் பூட்டிய எம் கார்குழலில்
தேன் அள்ளிய ஏந்தலே ...........

ஏந்திழையள் செவ் இதழில்
செய்யுள் எழுதிவிட்டீரோ .........
வண்டினம் தமிழ் படிக்க தவம் புரிகிறது !!!
இமைக்கும் பொழுதினிலே யெம்
உடலை உழவு செய்யும் உழவனே ............
எம் பாதம் தொட்ட மண் கூட மலர்ந்து விட்டது

உம் உள்ளத்திலே யாம் மலர்ந்து யிருப்பதால் !!!!!
வேல்விழியாள் விழிகளுக்குள்
உனை யெப்படி பதியம் யிட்டாய்

எங்கு நோக்கினும் உம் வதனம் மலர்கிறதே !!!!
மையலில் மயிலின் விழியிலே
கவியெழுத காத்திருக்கும் கவிஞனே
என்னிடத்திலே நான் எனை யிழந்து விட்டேனடா
சட்டென உமது வித்தையை முடித்து கொள்ளும்
பித்தாகி விடுவாள் பாவம் பேதை !!!
காதலுடன் பூங்குழலி !!! 

குடியரசு தின நாள் வாழ்த்துக்கள் 26-01-13


முடியாட்சியில் மண்குடிசையில் இருந்தவன்
குடியாட்சியிலும் மண்குடிசையில் தான் இருக்கிறான்
வறுமையில் வாடியவன் வாழ்வில் மாற்றம்மில்லை
இதுவரை ஏழை வாழ்கிறான் ஏழையாகவே
கோல் பிடித்தவர்கள் வாழ்கிறார்கள் கோலாகலமாக!!!!

மாற்றம்மில்லா நாட்டில் குடியாட்சியென்ன
முடியாட்சியென்ன இரண்டும் ஒன்றுதான்
மாறாத மக்கள் வாழும் வரை தீராது துன்பம்!!!!!

இந்தியனாய் பிறந்தற்கு பெருமை மட்டும் கொள்கிறார்கள் 

சகா இந்தியன் படும்துன்பம் மட்டும் யாருக்கும் புரிவது இல்லை
இதற்கு மேல் ஒன்றும் தோன்றவில்லை எழுத!!!!!!

ஏனினும் ரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்து
நாம் போராடி பெறவேண்டிய உன்னதமான
உரிமையை நமக்களித்த நல்லோருக்கு நன்றி !!!!!

அனைவருக்கும் இனிய
குடியரசு தின நாள் வாழ்த்துக்கள்
நட்புடன் பூங்குழலி !!!!

யார் ..?? புதுமை பெண்

புதுமை பெண் என்பவள் அதை தன் 
சுட்டெரிக்கும் விழியில் காட்டவேண்டும்
தென்றலாகவும் இருக்கவேண்டும்
புயலாகவும் சுழன்றடிக்க வேண்டும் ............
ஜோதியாக ஜொலிக்கவும் வேண்டும்
 நெருப்பாக எரிக்கவும் வேண்டும் ..........
தேனாக இனிக்கவும் வேண்டும் தேனீ 
யென தீயவரை கொட்டவும் வேண்டும் .........
வில்லென வளையவும் வேண்டும் கொடும்
பாம்பின் வாயிலிருந்து
வெளிவரும் விஷம் போலே நமை 
சீண்டுபவர்களை தீண்ட வேண்டும் நம் பேச்சு ..............
நம் ஒவ்வொரு அசைவிலும் நம் பலம் காட்டவேண்டும்
இதைவிடுத்து புதுமை பெண் என்பதை
ஆடையில் காட்டி
நம் இனத்தை தலைகுனிய
வைக்கவேண்டாம் என்னினமே !!!!!

நட்புடன் பூங்குழலி !!!

Wednesday, January 23, 2013

கள்ளிகாட்டு இதிகாச


ள்ளிகாட்டு இதிகாசம் இதை படைத்தது நமக்கு விருந்தளித்த 
திரு .வைரமுத்து அவர்களுக்கு நன்றி

இதிகாசத்தை எனக்கு பரிசளித்து இதை படிக்கும் வாய்ப்பளித்த

எனது நண்பனுக்கு நன்றி

இதை படித்து முடித்ததும் எனை சுற்றி பேயத்தேவர் ,அழகம்மை,முருகாயி யென

இதிகாசத்தின் பாத்திரங்கள் உலவுவது போலொரு பிரம்மை ,இதை கனத்த மனதுடன் எழுதி முடித்ததாய் கவி பேரரசு குறிப்பிட்டு இருக்கிறார்

படிக்கும் நாமக்கும் இந்நிலையே ,நான் அங்கு கண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

பசுமையாய் இல்லையென்றாலும் பாசமுள்ள மனிதர்களைக் கொண்ட

ஒரு வெயில்காட்டு பிரதேசம் - கள்ளிப்பட்டி, இங்கிருந்து ஆரம்பம் ஆகிறது இதிகாசம் .

இதுவரை சினிமாவில் நாம் பார்த்த பசுமையான கிராமங்களைப் போலில்லாமல்,

கத்தாழைச்செடிகளும், மொட்டைப்பாறைகளும், ஓணான்களும் மட்டுமே அடையாளங்களாக இருக்கும் கள்ளிப்பட்டி என்ற ஊரை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது ஒரு தனிச்சிறப்பு.

அடுத்த வேலை உணவுக்கு மண் வெட்டியை தூக்கும் 70 வயது 'பேயத்தேவர்' இந்த கதையின் நாயகன் ,கள்ளிக்காட்டு வெயில்வரப்பில், உழுதுண்டு வாழும் விவசாயி.

இவரது காதல், உழைப்பு, அனுபவம், சோகம், நேர்த்தி,
நிபுணத்துவம் இப்படி எல்லாவற்றையும் பற்றி கூற,
ஒரு விவசாயியின் வாழ்க்கையை உடனிருந்து
வாழ்ந்து பார்க்கும் அனுபவத்தை எனக்கு இந் நூல் கொடுத்தது .

எனை கண்ணீர் கசிய வைத்த பகுதி தன் மனைவி இறந்த செய்திகேட்டு கனத்த மனதுடன் வீடு திரும்பும் கணவன் தன் நண்பனிடம் அவளுடன்

வாழ்ந்த வாழ்க்கையை ஒவ்வொரு கிலோமீட்டரிலும் எண்ணி எண்ணி
அழுதபடி தனது நண்பனிடம் புலம்பிக்கொண்டு போவது மிகவும் கனமான ஒரு பகுதியாக இருந்தது.
தன் மனைவியின் அருமையை சொல்லிப் புலம்பும் பகுதி நெஞ்சை வருடுகிறது.

அரசாங்க அதிகாரத்தாலும், அணைக்கட்டு அலைகளாலும் ஆட்கொள்ளப்படவிருக்க,
அங்கு வசிக்கும் மக்கள் சொந்த ஊரை விட்டு தாய்நாட்டிலேயே அகதிகளாய்
அலைந்து திரியப்போகும் கொடுமையை எண்ணியபடி வெளியேறும்போது,

அந்த மண்ணை விட்டுப்பிரிய மனமில்லாத ஒரு 70வயது விவசாயி தன் மண்ணிலேயே உயிரை விடுவதே இந்த கள்ளிக்காட்டு இதிகாசம்.

இதைப் படிப்பவரின் கண்ணீர்துளியின் உப்புச்சுவையை புத்தகத்தின் ஒருசில பக்கங்களாவது கண்டிப்பாக சுவை பார்க்கும்.

புத்தகம் படித்து முடிக்கும்போது, அணைக்கட்டில் புரண்டோடும் வெள்ளத்தில் நம் உணர்வும் புரண்டோடும். நம் மனமும் கள்ளிக்காட்டு தடயங்களை தேடும்.

வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக
வாசித்துப் பாருங்கள்!


நட்புடன் பூங்குழலி !!!!

Saturday, January 19, 2013

முகில் கூந்தல் சிறை


பனி மழை சிந்தும் மேகங்களின் யிடையே
மரகத பூஞ்சிட்டு மணிவாய் தனை
திறந்து மொழிகின்ற குரல் கேட்டு
எம் விழித்திரைக்குள் மறைந்திருக்கும் சூரியனே 
வெண்ணிலவின் முகம் காண வாராயோ !!!!!!

தென்றல் சிலிர்க்கின்ற சோலையிலே
குழலுக்கும் யாழுக்கும் தவழ்ந்திடும் பூங்காற்றும் மலை 
முகில் கூந்தலில் சிறைப்பட்டு விட்டதடா
கோதையவள் கார்குழலில் சிக்குண்ட
காற்றும் காத்திருகிறது காண வாராயோ!!!!

பொங்கி நிற்கும் பெரும் கடலும் தேங்கி விட்டது 
உம்மவள் புன் சிரிப்புக்குள் சிக்கிவிடதால் 
இதழ் திறக்க வேண்டுமெனில்
இளையவன் நீர் வரவேண்டும் வாராயோ !!!!

காதலுடன் பூங்குழலி !!!!

முகநுல் நண்பா...




முகநுலில் முகவரி ஏதும் யின்றி
அறிமுகமாகி என் அகத்தில் நண்பனாய்
பதிந்தவனே சேர்வு அடையும் நேரமெல்லாம் 
ஆறுதலாய் நிற்பவனே !!!!
என் கவலை யெல்லாம் பகிர்ந்து கொள்ள
தந்தையாய் தோல் கொடுப்பவனே
நான் சினம் கொண்ட போதெல்லாம்
என் தாயாய் எனை அணைத்தவனே !!!!!
உனை என்ன சொல்லி வாழ்த்த
வார்த்தையின்றி நிற்கிறேன் யெனினும்
தேங்கி விட்ட நீராய் யில்லாமல்
மடைதிறந்த வெள்ளமாய் என்றும்
நம் நட்ப்பு நிலைக்க வேண்டும் !!!!!
உன்னிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை
பற்றுதலை பகிர விரும்புகிறேன்
பாசமிகு பிறந்த நாள் வாழ்த்துக்கூறி
என் அன்பு ராஜீவ் குமார் !!!!!

நட்புடன் ஜோதி !!!!

இரண்டாம் சாமத்திலே

நிலவு தனை மறக்கும் இரண்டாம் சாமத்திலே 
செந்தாமரையாய் வீ ற்றிருக்கும் எம் பொற்றமரையே
உம் செவ் இதழில் தேன் பருகும் வண்டாகி போனேனடி என்றுரைக்கும் மன்னவனே !!!

உம் ஆற்றல் மிகுபேச்சால் வஞ்சியின் மனம் பறித்து 
மானாக யிருந்தவளை மயிலாக மாற்றி
மயிலாக யிருந்தவளை ஒயிலாக
உம் எண்ண கூட்டில் பூட்டிவிட்டு !!!!

வித்தகம் பேசுவது நியாயமா
என்று உன்னவள் சிரித்த சிரிபொலியோ
அந்த அருவி கொட்டும் ஒலி!!!

தொள்ளு தமிழ்மகள் வண்ண முகத்திலே
நாணம் பூசி காத்திருக்கிறாள்
கொற்றவன் உம் வருகைக்காக!!!!

தேனுங் கனியும் மதுவுங் கலந்தொன்று செய்த உடலுடையாள் உம் ஏக்கத்திலே எண்ணம் மறந்து இடை சுருங்க இதழ் மடங்க அங்கு உமை வளைக்க அவள் வெள்ளை மனந் திறந்து... -
புதுப் பாலின் சுவையும் மணமும் கலந்தொரு
பாடம் நடத்துகின்றாள்.!!!!

காற்றிலே புரவி செய்து வில்லில் லொரு
பாதை அமைத்து அமுதுண்ண பறந்து வாரும்
தேடலற்ற காதல் கொண்டு உம் மீது கொடிபோலே
படர்ந்து இருக்க ஆசைகொண்டு பூத்திருக்கும்
பூங்குழலியின் கரம் பிடிக்க !!!!!!!

காதலுடன் பூங்குழலி

Tuesday, January 15, 2013

காணும் பொங்கல்


கன்னியருக்காய் வரும் கன்னி பொங்கலே 
காணும் பொங்கலே உனை 
இரு கைதொழுது வரவேற்கிறோம் !!!!

வரப்பு சண்டை வாய்க்கா சண்டை 


அத்தனையும் மறந்து விட்டு போன சொந்தமெல்லாம் தேடி சென்று 
உரிமையோடு உறவு சொல்லி உபசரித்து 
காளையர்கள் கன்னியரை வட்டமிட கண்டும்
காணமல் பெரியவர்கள் நகர்ந்து செல்ல !!!!!

சுமங்கலியின் கையாலே புது மஞ்சள் வாங்கி வந்து 
புதுப்பானை தனிலே பாங்காய் அதை முடிந்து 
காற்றோடு கதிரடித்து முற்றிய நெற் கதிரெடுத்து 
பசும்பாலோடு வெல்லம் இட்டு பக்குவமாய் பொங்கலிட்டு படைசிருக்கோம் மாரியாத்தா !!!




நெனச்சபடி கண்ணுக்குள்ள காதலெல்லாம் தேக்கி வைச்சு எனை வாஞ்சையோடு பார்த்து நிற்கும் 
எம் மாமனுக்கே நான் சொந்தமாக வேணுமடி !!!!!

குதூகலத்தோடு கன்னியர்கள்
ஆனந்தமாய் ஆடிப்பாட 
களிப்புடன் இன்று காணுவோம் 

கன்னியரின் பொங்கலாம் காணும் பொங்கல் !!!!
உறவுகளுக்கும் நட்ப்புகளுக்கும் பூங்குழலியின் 
அன்பு காணும் பொங்கல் வாழ்த்துக்கள் !!!

Monday, January 14, 2013

கனவுகளை விதைத்தவனே


எமக்குள்ளே கனவுகளை விதைத்தவனே 

நீ விதைத்தவை யெல்லாம் நிஜமாக்க எனக்குள்ளே 

உமக்காக தோட்டம் ஒன்று வளர்க்கிறேன் 
இத் தோட்டத்தில் மலர்ந்து யிருப்பது 
உம் நிஜங்களும் நிழல்களும் மட்டுமே !!!

இங்கு நீராக எம் உதிரம் பாய்ச்ச படுகிறது 
உரமாக எம் உயிர் தூவப்படுகிறது 
மலராக எம் நேசம் மட்டுமே மலர்கிறது !!!!

நீ மட்டும் முழுமையாக மலர்ந்திருக்கும் 
இங்கு யாருக்கும் அனுமதியில்லை 
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
புதைந்து போனதின் நினைவாக 
கல்லறையாகி போகட்டும் எமக்குள்ளே !!!!

காதலுடன் பூங்குழலி !!!




Saturday, January 12, 2013

முகமூடி


எல்லோரும் முகமூடி அணிந்து கொண்டு
என் முகத்தை கிழித்து கொண்டு இருகிறார்கள் 
அதற்காக எனை நான் மாற்றி கொள்ள முடியாது
என் நிஜம் நானறிவேன் எனை பற்றி 
உணர்தவர்கள் எனை அறிவார்கள் !!!!!

அனைவருக்கும் நன்றி 

பூங்குழலி !!!!!

Friday, January 11, 2013

தை மகளே

தை மகளே திருமகளே தமிழனுக்காய்
பூத்த தமிழ் மகளே திங்களுக்கு முன்
பிறந்தவளே தென்றலாய் வருபவளே
உம் வரவையே யாம் போற்றுவோம் !!!!!

புத்தம் புது சூரியனாய் பட்டொளி வீசி வாராய்
பச்சை வண்ண ஆடை உடுத்தி பட்டு போன
எம் வாழ்வை பசுமையாக்க வாராய் !!!!
எம் வாழ்வெல்லாம் இனித்திருக்க
செங்கரும்பாய் வாராய்
வெட்டி யெடுத்த புது பொன் மஞ்சளாய்
எம் வாழ்வை மணக்க செய்ய வாராய் !!!

கடனுக்கு விதை வாங்கி உனை நம்பி
நாற்றை பதித்து நான்கடி வளர விட்டு
எம் உதிரத்தை நீராய் பாய்ச்சி
நான்கு போகம் வளரவிட்டு
பாங்காய் அறுவடை செய்து முதிர்ந்த நெல்லெடுத்து
தேனும் நெய்யும் கலந்து பொங்கலிட்டு
காத்திருக்கும் எம் பெயரே விவசாயி !!!!!

நித்திரையில் யிருக்கும் தமிழா
நம் தை அன்னை வந்துவிட்டாள் விழி திறந்து பார்
அன்னையே எமை எதற்கும் துணிந்த இனமாக்கு
அதுபோதும் தாயே உம் வரவை யாம் போற்றுவோம் என்றென்றும் பொங்கலிடுவோம் !!!!

உறவுகளுக்கும் நட்புகளுக்கும் பூங்குழலியின்
இனிய தை திருநாள் , உழவர் மற்றும்
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!!!!

இசைத் தூண்கள்

தமிழன் சொந்தமாக சிந்திக்க இயலாதவன் தன் மண்ணிலே அடிமையக்கப்பட்டவன்
சொந்த நாட்டிலேயே வேற்று உலக வாசியாக சித்தரிக்க படுபவன் இவை தான் நமது அடையாளமாக சொல்லபடுவது .

உண்மையில் நம் பெருமையாய் நாமே
உணரவில்லை உலகிலேயே தலைசிறந்த கட்டட கலைநிபுணர்கள் தோன்றியது ,
தமிழ் மண்ணில்தான் மிகவும் வினோதமான முறையில் பின்பற்றபட்டது
உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத
அதிசயமான இசைத் தூண்கள்.
இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர்,
இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! .

சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்றுதனித்தனி ராகங்களை இசைக்கின்றது .

இதில் பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறியதூண்களில்,
"மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது .

அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும்.

மற்றும் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை .

இதை பற்றிய ஆராய்ச்சிக்கு " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது !!!!

இதுபோன்ற பல சிறப்புகளை நாம் முன்னோர்கள் நமக்காக வைத்து விட்டு சென்று இருக்கிறார்கள் அவர் வழிவந்த நம்மால் புதியதாக ஏதும் செய்ய இயலவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தையுமாவது
கட்டிக்காப்போம் !!!!!

நன்றியுடன் பூங்குழலி !!!

எம் ஏந்தலே

எம் ஏந்தலே கயலினம் சுமந்த நதி போலே
உமக்கான எம் காதலை சுமந்து
கொண்டு காத்திருக்கும் ஏந்திழையாளை
காண சகிக்காது தண்டலை மயில்கள்
நடனமாட மறந்து விட்டனவோ !!!!!!

விண்ணில் திரிகின்ற மீனெல்லாம்
எம் விழி நீரில் உழல கண்டு
தாமரை தாங்கிய குளம் தம் நீரெல்லாம்
வடித்து விடாதென எம் தோழி கதைக்க கேட்டு
மனம் பதைக்க நின்றேன் கோதை !!!!

கல்கி மகளின் கால் சதங்கையின்
இசை கேளாமல் எம் நந்தவன
குவளை பூ கண் விழித்து நோக்க
மலரின் வாட்டம் போக்க மங்கை
குரலெடுத்து பாடினாள் !!!!!!

தேம் பிழி மகர யாழோ யென
வாண்டுகளும் தலை தூக்கி நோக்கி
எம் வதனம் தீண்ட என்னவனோ யென
எம் வண்ணம் மாறி விட்டதடா !!!!

எம் மாதவனே எனை முகர ஏனோ
நாழிகளை கடத்துகிறாய் !!!

காத்திருக்கும் பூங்குழலி !!!

என்ன கிறுக்கா அலையவிட்டு


என்ன கிறுக்கா அலையவிட்டு 
முறுக்கா நிக்கிறியே ...
கண்ணால என்ன மயக்கி விட்டு 
கதிரா அடிக்கிறீயே....
எம்மோட கண்ணுக்குள்ள 
நொழஞ்சுபுட்டு கரையேற மறுக்குறியே !!!!

மோரா இருந்த என்ன தயிரா
ஓறைய வச்சு காத்தா மறைஞ்சுபுட்டியே ....
ஓடாயிருந்தயென்ன ஒடைச்சு
மணலா நிரவி விட்டு
மலரா இருந்தயென்ன வண்டா
அலையவிட்டு சிட்டா பறந்ததென்ன !!!!!

ஊரொறங்கி போன சாமத்துல
நான் ஒருத்தி மட்டும்
ஒறங்காம காத்திருக்கேன் விடியலுக்கு
உம்மோட உசுருக்குள்ள புகுந்து
உதிரமா ஓடொணும் ஊருமெச்ச
என்னாசை மச்சான் கைபுடுச்சு
நுறு ஜென்மம் வாழனும் !!!!!

காதலுடன் பூங்குழலி !!!!

Thursday, January 3, 2013

நெருஞ்சி முள்ளாய் எனைத் துளைத்து


 
நீ உனை மறந்து எனை நினைத்து நின்ற நாட்கள்
நெருஞ்சி முள்ளாய் எனைத் துளைத்து
உனை மறக்கமுடியாமல் செய்கிறது !!!!

ஏனோ எனை விலக்கவும் நினைக்கிறாய்
அணைக்கவும் துடிக்கிறாய்
நானோ பாதை மறந்த பட்டாம் பூச்சியாய்
உனை தேடி அலைகிறேன் !!!!!

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தாலும்
தேங்கி விட்டேன் உன் நினைவில்
மௌவனம் யேனும் முக மூடி அணிந்து
தனிதனி தீவாய் நின்றது போதும் !!!!!

எனை வென்றுவிடு இல்லை கொன்று விடு
உன்னில் கலந்து பயணிக்கவும் தயார்
உனை விடுத்தது மரணிக்கவும் தயார் !!!!!


காதலுடன் பூங்குழலி !!!!

Wednesday, January 2, 2013

நான் திமிருக்கும் திமிர் பிடித்தவள்


நான் திமிருக்கும் திமிர் பிடித்தவள் 

உம் ஆணவமான ஆண்மைக்குள்
எம்மை சிறைக் கொண்டவரே !!!!

யாம் உமக்களிக்கும் பொற்காசுகள்
தாம் எம் வியர்வைத்துளிகள் !!!!

மழைத் தேவனின் வருகைக்காக
உடல் திறக்கும் நிலம் போலே !!!!

பால்மணம் மறந்து பருவம்தொட்ட நாளாய்
கனிந்திருந்தேன் உமக்காய் !!!!

எம் திமிர் தின்று உயிர் கொடுத்த ஏந்தலே
உம் திரட்டிய மீசைக்குள் புகுந்துவிட்டேன் !!!

எமக்குள் புகுந்து வேர்விட்டதால்
நீரோன்றும் வென்றுவிடவில்லை !!!

எம் வேந்தே நீர் திமிர் பிடித்தவர்
நான் திமிருக்கும் திமிர் பிடித்தவள்
 
தீர்த்துகொண்டு அறிவித்துக்கொள்
யார் வென்றாரென...!!!!

காதலுடன் பூங்குழலி !!!!

Tuesday, January 1, 2013

விண்ணைதாண்டி வருவாயா



மௌனமாய் ஒரு யுத்தம்




நமக்குள்ளே மௌனமாய் ஒரு யுத்தம் 

நடந்து கொண்டு யிருந்தாலும் 
எம் எண்ண அறைகளில் யெல்லாம் 
உம் நினைவு விளக்கை ஏற்றியிருக்கிறேன் !!!!!

மயிலிறகாய் யெனை வருடி செல்லும் 
உம் ஸ்பரிசம் யில்லையென்றலும் வருந்தவில்லை 
எம் மனம் முழுவதும் நீ மட்டும் நிறைந்திருக்கிறாய் !!!!!

காதலுடன் பூங்குழலி !!!!!