Tuesday, August 20, 2013

அதே ஆற்றங்கரையில் !!


விழியிலே விதைத்து உயிரிலே
பூத்தது நம் காதல் நாம் இல்லாமல்
போனாலும் நம் காதல்
பேசப்படும் காவியமாக...
என் காது மடல்கள் தவம் இருக்க
துவங்கிவிட்டன உன் ஒலிகேட்க
என் கருவறையும் காத்திருக்க
துவங்கி விட்டது உன் உயிர் சுமக்க ....
உனக்கான கவிதைகளில் எழுத்தாய்
நான் என்னைத்தான் உதிர்த்து
கொண்டுருக்கிறேன் கண்டு கொண்டாயா
...
பனிப் பெய்த இரவுகளும்
அதிகாலைக் குளிர்ப் புல்லும்
சாட்சி சொல்லும் வாயிருந்தால் …
உன் பார்வையில் தீப்பற்றி
இதயத்தைக் கருக்கிய
ஆயிரத்தோர் இரவில் என்னையும்
உன்னையும் இழந்திருந்தேன் ...
உள்ளுக்குள் எங்கிலும் துக்கம்
பிதுக்கி இழுக்க நார்போல
இதயம் எங்கிலும் உன் நினைவுகள் …
அன்பே நீயும் நானும் காதல்
என்னும் படகில் ஏறி
வாழ்க்கையென்னும்
கடலில் பிரயாணிக்கிறோம்..
கரை சேருமோ இல்லை
கடலில் முழ்குமோ ஆனாலும்
நான் கனவுகள் காண்கிறேன் ...
உனக்கான கவிதைகளில்
என் உயிர் ஊற்றி எழுதுவதால்
உன்னை ஜீவனோடு வந்து சேர்கிறது
உள்மனதில் உனைத் தாங்கி
உனக்கென நானலைந்த நாழிகைள்
முள்ளாகத் தைக்கின்றது எனை
என் சோழனே..
மூவாயிரம் ஆண்டுகள்
காத்திருக்கிறேன்-அன்று
என்னை நீ விட்டு சென்ற
அதே ஆற்றங்கரையில் !!

காதலுடன் பூங்குழலி !!!!!

 

2 comments:

  1. யாருக்கும் பயப்படாமல் வாய் விட்டு அழுவதற்காகவாது நீங்கள் உங்கள் காதலில் ஜெயிக்கத்தான் போகிறீர்கள்....கலங்காதே கண்மணியே...உனை சேரும் உன் சோழன் நிச்சயம் உனது கரம் கோர்க்க வருவான்...காதலால் இப் பூலோகத்தை ஆண்டு உங்கள் காதல் வரலாற்றில் பேசப்படும் காவியமாக..

    ReplyDelete
  2. நீங்க மறுக்கும் நினைவுகளை சுமத்து நித்தம் உமை தேடி சத்தமில்லாமல் சபதத்தோடு நீயே சன்னதி என காத்திருக்கும் என் காதல் மன்னவா என் மாயவா, இனியவர் வருவார் இல்லறம் நல்லறமாக்க

    ReplyDelete