Wednesday, January 23, 2013

கள்ளிகாட்டு இதிகாச


ள்ளிகாட்டு இதிகாசம் இதை படைத்தது நமக்கு விருந்தளித்த 
திரு .வைரமுத்து அவர்களுக்கு நன்றி

இதிகாசத்தை எனக்கு பரிசளித்து இதை படிக்கும் வாய்ப்பளித்த

எனது நண்பனுக்கு நன்றி

இதை படித்து முடித்ததும் எனை சுற்றி பேயத்தேவர் ,அழகம்மை,முருகாயி யென

இதிகாசத்தின் பாத்திரங்கள் உலவுவது போலொரு பிரம்மை ,இதை கனத்த மனதுடன் எழுதி முடித்ததாய் கவி பேரரசு குறிப்பிட்டு இருக்கிறார்

படிக்கும் நாமக்கும் இந்நிலையே ,நான் அங்கு கண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

பசுமையாய் இல்லையென்றாலும் பாசமுள்ள மனிதர்களைக் கொண்ட

ஒரு வெயில்காட்டு பிரதேசம் - கள்ளிப்பட்டி, இங்கிருந்து ஆரம்பம் ஆகிறது இதிகாசம் .

இதுவரை சினிமாவில் நாம் பார்த்த பசுமையான கிராமங்களைப் போலில்லாமல்,

கத்தாழைச்செடிகளும், மொட்டைப்பாறைகளும், ஓணான்களும் மட்டுமே அடையாளங்களாக இருக்கும் கள்ளிப்பட்டி என்ற ஊரை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது ஒரு தனிச்சிறப்பு.

அடுத்த வேலை உணவுக்கு மண் வெட்டியை தூக்கும் 70 வயது 'பேயத்தேவர்' இந்த கதையின் நாயகன் ,கள்ளிக்காட்டு வெயில்வரப்பில், உழுதுண்டு வாழும் விவசாயி.

இவரது காதல், உழைப்பு, அனுபவம், சோகம், நேர்த்தி,
நிபுணத்துவம் இப்படி எல்லாவற்றையும் பற்றி கூற,
ஒரு விவசாயியின் வாழ்க்கையை உடனிருந்து
வாழ்ந்து பார்க்கும் அனுபவத்தை எனக்கு இந் நூல் கொடுத்தது .

எனை கண்ணீர் கசிய வைத்த பகுதி தன் மனைவி இறந்த செய்திகேட்டு கனத்த மனதுடன் வீடு திரும்பும் கணவன் தன் நண்பனிடம் அவளுடன்

வாழ்ந்த வாழ்க்கையை ஒவ்வொரு கிலோமீட்டரிலும் எண்ணி எண்ணி
அழுதபடி தனது நண்பனிடம் புலம்பிக்கொண்டு போவது மிகவும் கனமான ஒரு பகுதியாக இருந்தது.
தன் மனைவியின் அருமையை சொல்லிப் புலம்பும் பகுதி நெஞ்சை வருடுகிறது.

அரசாங்க அதிகாரத்தாலும், அணைக்கட்டு அலைகளாலும் ஆட்கொள்ளப்படவிருக்க,
அங்கு வசிக்கும் மக்கள் சொந்த ஊரை விட்டு தாய்நாட்டிலேயே அகதிகளாய்
அலைந்து திரியப்போகும் கொடுமையை எண்ணியபடி வெளியேறும்போது,

அந்த மண்ணை விட்டுப்பிரிய மனமில்லாத ஒரு 70வயது விவசாயி தன் மண்ணிலேயே உயிரை விடுவதே இந்த கள்ளிக்காட்டு இதிகாசம்.

இதைப் படிப்பவரின் கண்ணீர்துளியின் உப்புச்சுவையை புத்தகத்தின் ஒருசில பக்கங்களாவது கண்டிப்பாக சுவை பார்க்கும்.

புத்தகம் படித்து முடிக்கும்போது, அணைக்கட்டில் புரண்டோடும் வெள்ளத்தில் நம் உணர்வும் புரண்டோடும். நம் மனமும் கள்ளிக்காட்டு தடயங்களை தேடும்.

வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக
வாசித்துப் பாருங்கள்!


நட்புடன் பூங்குழலி !!!!

No comments:

Post a Comment