Wednesday, April 24, 2013

நர்த்தகியின் நடராஜனே


ஒற்றை சங்கேந்தி ஏந்தி உடலெல்லாம் திருநீறுபூசி
பித்தனாய் உனை மாற்றி உலகை வலக்கையிலே
தாங்கி நிற்கும்
உலகநாதா
உயிர்கொண்ட நிலவாக உம் மீது படர்ந்திருக்க
மார்போடு எனை அணைத்து
.....

என்னுள்ளே குடிகொண்டு
எம் ஒருபாதி தனதாக்கி
....

வெண் பனி பூதூவ செந்தாமரையாய் முகம் மலர
நீயின்றி நானில்லை உமையவளே என்றெனை
தன்னுளே கொண்டவனே
....

கங்கையை சுமந்திருக்கும் கொற்றவனே
நர்த்தகியின் நடராஜனே
....

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உனையன்றி வேறேதும் கதியில்லை
எமக்கு

காதலுடன் பூங்குழலி !!!!!

இயற்கை அன்னை



சிந்திச்சிதறிய சிறு துளியெல்லாம் சேர்த்து
மோகத்தோடு மேகத்தில் வைத்து 
தூதனுப்பினேன்
ஆகாய தலைவனுக்கு

மோகத்தோடு வேகமாய் மேகத்தை முத்தமிட்டு
பெரு மழை துளியாக சிதறவிட்டான்
காதலை எம்மேனியில்...

மேனிநனைய நனைய உம் உயிர்வாங்கி
பசுமையாக படர்ந்து நின்றேன்
பாரெல்லாம் செழித்து நின்றேன் வனமாக

கள்வனைபோலே மாசு வந்து
கார்மேகத்தை கலைத்ததால்
தூதுவிட ஏதுமின்றி வெற்றுக்காகிதமாய்
பற்றிஎரிய தேகம் காய்ந்து விட்டது

மார்தந்து தாகத்தை தீர்த்தவள்
வேதனையில்
கொதிக்கின்றாள்
உயிர் தந்த உத்தமியை
ஊடுருவி
சுரண்டுகிறோம்
என்பதை உணர்வாய
மானிடா..??

போர் கால சூழல் போல
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
உன்
போலியான தேவைநோக்கி

நீ வாழ எனைத்தந்தேன் நீயோ சுயநலமாய்
எனை அழிக்க
தயரகிவிட்டாய்

ஓலமிட்டு கதறுகிறேன் அலட்சியம்
செய்யாதே..!!
இயற்கையெனும் அன்னை நானில்லை
யென்றால்
 உலகில் நீ வாழும் நாட்கள் கூட குறைந்துவிடும்

காதலுடன் பூங்குழலி

Wednesday, April 17, 2013

காற்றெனும் கயவனே



பாழிருள் நீக்கும் பகலலை போலே
எம் வாழ்விருள் நீக்க வந்த காவலனே…

கண்வழி புகுந்து
கனவென மலர்ந்த
காற்றெனும் கயவனே

விம்தித் தாழ்ந்த வெண்மார்பில் விலங்கிட்டு உமை பூட்ட
கண்ட மலைவீழ் அருவியும் மாமுகில் போர்த்தக் சுனைநீர் கயலும் 
தம் விழியிரண்டை மூட

உம் வீரம் கண்ட மேனி நிறம் மாற
வாலைபூவென நாணிநிற்கும் ஏந்திழையாழை
கண்டு நகைக்கும் ஏந்தலே

மங்கைநல்லாள் நிலமாக மீண்டும்
நீர் மழையாய்வருவீரோ

காதலுடன் பூங்குழலி

Tuesday, April 16, 2013

உளறலாய் ஆயிரம் கவிதைகள்




உயிர் நீயென்று ஆனப்பின்னே 
உனை மறக்கும் துணிவு எனக்கில்லை....
 
உன் நினைவு 
உதிரத்தோடு கலந்து விட்டது 
என்னுயிரை உதறும் வரை 
பயணிக்கும் உணர்ந்துகொள்....

உளறலாய் ஆயிரம் கவிதைகளை கொட்டிதிர்க்கிறேன்
நீ உணர்ந்தயா ..??

உனை கண்ட விழியிரண்டும் எனைக்கூட
காணமல் மருகுகிறது..!!

வருங்காலம் எப்படி விடியுமென்று..? 
இமை திறக்கமால் இருளுக்குப் பழக்கப்பட முயன்றால்
விசமம் செய்கின்றனவிழிகள்

இமையோரம் எட்டிப் பார்க்கும்
விழிநீரும்... ஏக்கமாய் பார்கிறது
உனை சுமக்கும் 
என் காதலை...

காதலுடன் பூங்குழலி ...

Saturday, April 13, 2013

இன்று போய் நாளை சொல்லுகிறோம்


வண்ண பட்டு உடுத்தி உச்சியிலே சாந்திட்டு
மணம் மாற மல்லிகை பூச்சுட்டி மங்களமாக
மனம் நிறைய கனவுகளை சுமந்தபடி
வாசலிலே விழியிருத்தி காத்திருந்தேன்

பட்டு வேட்டி சரசரக்க மிடுக்காய் வந்தவனை
நாணத்தோடு பார்த்துவிட்டு காத்திருக்க
சமையலறை கதவிடுக்கில் காதைவைத்து
இல்லாத கடவுளையெல்லாம்
வேண்டி நிற்க்கும் அம்மா

போய் சொல்கிறோம் என்று
சொல்லிவிட்டு போனவர்களின் தடம் கண்டு
பரிதாபமாக நிற்கும் அப்பா

இவர்களுக்கு தெரியுமா ?
ஒப்பனைகளுக்கு பின்னே
ஒப்பனை இல்லாமல்
ஒரு மனது ஓலமிட்டு கதறுவது

இன்று போய் நாளை சொல்லுகிறோம்
என போனவர்களை
பேய் காற்று கொண்டுபோனதோ
போனயிடம் தெரியவில்லை

நிறமில்லா கனவுகளை நிதமும் நான் காண
நிலை கண்டு கலங்கும் அன்னையே
கள்ளமில்லா பருவத்திலே
கள்ளிப்பால் கொடுத்திருக்கலாம்
நாசியிலே நெல்லிட்டு நயமாக முடித்திருக்கலாம்
இப்படி அலங்கரித்தே நான் அலுத்துப்போக

காதலுடன் பூங்குழலி ..!!!

பெண்மை..



மலராத வயிரென்று..! நான் பெற்ற பெயர் நீங்க,
தாமரையே .. என்னுள்ளே சூல் கொண்ட  நிலவாக
தங்கமே நீ வாராயோ …!!

வெள்ளிக்கொலுசு ஒலிக்க
வெல்லக்கட்டி நீ வருவாயோ ..

பாலும் சோறும் நானூட்ட
மல்லிகையே நீ வரையோ..

முல்லை அரும்பே நின் செவ்விதழ்
விரித்திட்டால் வீசும் மணத்திற்கு ஈடேது

செவ்வாய் திறந்து உதிர்க்க போகும்
அம்மா எனும் வார்த்தையெனக்கு வேதமடி

பால் மணம் மாற கண்மணியே வரபோகும்
நாளுக்காய் காத்திருக்கிறேன்

அன்னை வைத்த பெயர் மறந்து விட்டதடி
மலடி யெனும் பெயர் எனதாகி போனதடி
மொட்டு பூக்கும் முன்னாலே முடிந்து வைத்த
ஆசையெல்லாம் கவிதையென

தீட்டி இருக்கிறேனடி என்தங்கமே நீ வந்தால்
ஓவியமாகும் இல்லையேல் வெற்றுக்காகிதமாகும்

காதலுடன் பூங்குழலி !!!

(ஸ்ரீ விஜய) தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


யுகங்கள் பல கடந்தும் இன்னும்
மெரு குறையாமல் புடம்போட்ட 
தங்கமென இளமையுடன் வலம் வருகிறாள்
உனக்கும் காதலி எனக்கும் காதலி
உன்னுள்ளும் வாழ்கிறாள் என்னுள்ளும் வாழ்கிறாள்
ஆனாலும் இன்னும் கன்னியவள்
மொழியாகி ,இசையாகி ,எழுத்தாகி
முக்கனியை சுவைக்க தந்தவள்
கன்னியாய் ,குழந்தையாய் ,அன்னையாய் ,
தந்தையாய் என் கவிதையின் வடிவம் அவள்
பாரெல்லாம் போற்றும் கவிதாயினி
அவளே நம்மையெல்லாம்
இணையத்தில் இணைத்தவள்
நம் அன்னை தமிழ்
அன்னை

எத்திக்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு
எம் உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ..!!

காதலுடன் பூங்குழலி !!!

Thursday, April 4, 2013

வெண்ணிலவு பெண்ணே


நீலவண்ண வானில் மின்னும் நட்சத்திரங்களின் ஊடே
மேகத்தில் புதைந்திருக்கும் வட்ட முக
"வெண்ணிலவு பெண்ணே"
உனை பாடாத கவிஞன்யில்லை
காணாத கண்களும் இல்லை
உனை தேடாத மனமும்யில்லை
என் கவிதை கேட்பாயா  நீ?

என்னவனை காணநேர்ந்தால் இதை சேர்ப்பாயோ நீ ?
இங்கு வானும் இல்லை வட்டமுகமும் யில்லை
வெகுதுரத்தில் இருந்தாலும் என்னவனின் நினைவு மேகத்தில் 
எனை புதைதிருக்கிறேன் கவிதைகள் ஏதும் பாடவில்லை 
பகலிரவாய் தேடுகிறேன் பார்ப்பேனோ அவனை பாராமலே போவேனோ
மரம் விட்ட இலையாய் மண்ணில் வீழ்ந்தாலும்
அவன் திசைநோக்கியே பறக்கிறேன்
சேரும்முன்னே சருகாவேனோ..?

காதலுடன் நந்தினி தேவி