Monday, December 24, 2012


 பொன்னியின் செல்வன்


அழியாத அழகிய நுலை நெய்த நெசவாளி திரு.கல்கி கிருஷ்ண மூர்த்தி இந்த பட்டயத்திற்கு அழியாத வண்ணம் கொடுத்தவர் திரு.மணியம்,
திகட்டாத தமிழிலே படைக்க பட்டு தமிழுக்கு பெருமை சேர்த்த காவியம் 

ஆம் அதுதான் தமிழின் மிக சிறந்த வரலாற்று நாவல்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது பொன்னியின் செல்வன் ...
ஏழு வருடங்கள் கடந்து விட்டன இருப்பினும்,

என் மனம் எனும் கர்ப்பப்பையில் இறக்கி வைக்க
முடியாதக் கருவாக ஒரு காவியம் நிலைத்திருக்கிறதென்றால்
அது ‘பொன்னியின் செல்வன்’தான்....

ஒரு தாய் எப்படி தன் குழந்தையின் குறும்புத் தனங்களை பிறரிடம் கூறி மகிழ்வாளோ அதுபோல, கல்கி எனும் எழுத்தாளன் பெற்றெடுத்த குழந்தையை இன்று வாசகர்கள் தஙகளது மடியின் மீது தவழவிட்டு,
அது புரியும் லீலைகளை மற்றவர்களிடம்

உவகையோடு பகிர்ந்துக் கொண்டு வருகிறோம்
இது கல்கியின் கற்பனையோ காவியமோ
எதுவாக இருந்தாலும் சரி அதில் வசிக்கும் பாத்திரங்கள் 

வந்தியத்தேவன்,
அருள்மொழிவர்மன்,
(ராஜா ராஜா சோழன்)
பூங்குழலி ,
குந்தவை, 
ஆதித்த கரிகாலன்
பழுவேட்டரையர்,
நந்தினி தேவி
ஆழ்வார்க்கடியான் 
அனைவரும்
என்னை சுற்றி இருப்பது போலே இன்று வரை ஒரு எண்ணம் இவர்கள் அனைவரையும் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆவல் உண்டாகிவிட்டது உண்மை நிகழ்வுகளோடு அங்கங்கு கதை சேர்த்து கல்கி பிணைத்திருக்கும் இக்காவியம் என்றும் படித்தவர் அனைவர் மனதிலும் வாழும்.

இக்காவியத்தை நான் என்றும் அனைவருக்கும் பரிந்துரைப்பேன்
இதுவரை 5 முறைகள் பொன்னியின் செல்வனை படித்து விட்டேன். ஒவ்வொரு தடவையும் புதிய புதிய விஷயங்களோடு நம்மை எதிர் நின்ற‌ழைக்கும் காவியம் ‘பொன்னியின் செல்வன்’....

இந்த புத்தகம் படித்த பிறகு தஞ்சாவூர் மற்றும் இலங்கை போய் ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் என்று கட்டாயம் அனைவருக்கும் தோன்றும்.!!!!!

நட்புடன் பூங்குழலி...

No comments:

Post a Comment