Tuesday, March 12, 2013

அந்த மூன்று நாட்கள்


சிட்டு குருவியாய் சிறகடிக்கும் எனை
முடக்கிவிடுகிறது அந்த மூன்றுநாள்
வேதனை
இருக்கையிலே அமர்ந்து நெளிந்து
கொண்டிருக்கும் போதுதான் தோன்றுகிறது
சோ! ஏன் பெண்ணென்ற பிறவிகொண்டாய்..?

மூன்றோ, ஐந்தோ யென நீளும் தினங்களில்
தனியிடம் விட்டு வாசற்படி வந்துவிட்டால்
அன்று ஒரு ருத்ரதாண்டவம் அடிவிடுவாள் அம்மா
என் கைப்பட்ட இடமெல்லாம் கழுவி
வசைபாடி முடிந்தபின்தான் உறங்க செல்லுவாள்

அப்பொழுது எல்லார் கண்களுக்கும்
நானோர்
பிச்சைக்காரியாக
வேடமிட்டு நிற்ப்பது போலொரு பிரமை
பிரளயம் எனும் சொல் வயிறுக்குள் தாண்டவம் ஆட
நனைந்து கனத்த பஞ்சை போலே
கனத்து விடுகிறது
நெஞ்சமும்

மூன்று நாள் வேஷத்தில் நானிருக்க
என் முகம் கூட மறந்திருக்கும் என் கணவனுக்கு
சட்டம் வந்துவிட்டது எல்லாச் சாதியும்
கோயிலுக்குள் வர.எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவணுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை என்ன
செய்ய

எனை கொண்டு மண்ணில் புதைத்தால்
மறுபடியும் வெளி வந்து எனை அறியாமல்
என் கால்கள் என் வீடு நோக்கியே பயணிக்கும்
எனை வெறுப்பவர்களும் அணைபவர்களும்
அங்குதானே
இருகிறர்கள்

நான் வேண்டும் இவர்களுக்கு நானில்லையெனில்
என் கணவனின் சுற்றும் பூமி நின்றுவிடும்
என் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்
வடிவம் பெற மண்ணாய் இவர்களுக்கு நான்
என் வாழ்க்கையை இதுவரை ஒருமுறைக்கு
கூட நான் வாழ்ந்தது
இல்லை

நட்புடன் பூங்குழலி !!!!

No comments:

Post a Comment