Wednesday, February 6, 2013

தரணிக்கு உணவளிக்க ஏர்ப்பிடித்தவன்




தரணிக்கு உணவளிக்க ஏர்ப்பிடித்தவன்
கையின்று கல்லுடைக்கிறது
கேணியில் குளித்தவன் தெருக்குழாயில்

தான் விதி நொந்து குளிக்க பழகிவிட்டான்
கோணிக்குள் உறங்கினாலும்
சொந்த மண்ணிலே

உலகம் மறந்து உறங்கியவன்
தெரு ஓரத்திலே உறங்க பழகிவிட்டான்

விடியலுக்கு முன்னே உலகம் காண பழகியவன்
இன்று கதிரவன் உச்சிக்கு வந்த பின்னும்

கண்விழிக்க மனம் இன்றி கிடக்கிறான்
சொந்த மண்ணுல காலுவைக்க
பொங்கல்வரை காத்திருக்கான்

குலசாமிக்கு பொங்கல் வைக்க மட்டும்
விவசாயி இவனை இயற்கையின் வறட்சி
ஏழ்மைக்குள் தள்ளிவிட்டதா ?
சோம்பேறி ஆக்கிவிட்டதா ?

நட்புடன் பூங்குழலி !!!

No comments:

Post a Comment