Monday, December 24, 2012

ஓர் பனிசிந்தும் பௌர்ணமி இரவு


ஓர் பனிசிந்தும் பௌர்ணமி இரவு



ஓர் பனிசிந்தும் பௌர்ணமி இரவிலே
கரைதாண்டி செல்கின்ற வெள்ளமாய்
அடங்காத நாம் காதலை நிலவுமகள்
மறைந்திருந்து காண!

எம் மரகத மூக்குத்தியை கலங்கரை
விளக்காய் வெய்த்து நீர்
எமக்குள் முத்தெடுக்க இறங்கிவிட
அந்திச்சிவப்பு செவ்வானத்தின்
அன்றாட பூப்பாய் யாம் மலர்ந்துவிட!

பிறை போன்ற நெற்றியிலே உம் இதழ் பதித்து
இமை மூட தென்றலும் தழுவ மறந்து தடம் மாறியதோ
கடல்கண்ட நதியாய் அலைபாயும் கார் கூ ந்தல்.
உம் மார்ப்பில் தஞ்சம் கொள்ள…!

கொடியிடையோ உம் இடையில் படர்ந்திருக்க
நரம்பு புடைக்க உனை யென்னுள் இறக்கி 
பெருகும் வியர்வையை எமக்குள்ளே விதைத்து விட்டீர்!

அந்தபுரத்து வண்டினமும் பூவினமும் யெம்
காதல் கண்டு வாஞ்சை கொள்ளும்வேளையிலே
புரவிகனைத்து உம் கடமையுணர்த்த
பிரிய மனமின்றி யெம் கண்ணீரை
உம் மார்பில் விதைத்துவிட !

விழி நீருடன் யெனை விடுத்து நீர் விலகிய நிமிடங்கள்
பலநுறு ஜென்மங்களை கடந்துவிட்ட பினும்
யின்னும் முள்ளாய் எம் நெஞ்சில் !

காதலுடன் பூங்குழலி !


No comments:

Post a Comment