Monday, December 24, 2012

காத்திருக்கிறாள் உம் அன்னை

கவிதை ஒன்றை எழுதிவைத்து 
காத்திருக்கிறாள் உம் அன்னை !!!



புது மஞ்சள் மணக்க பிறை நிலவு கீற்றை போலே
பூத்த உனை எம் உதிரம் எனும் மலர் தூவி

ஈரைந்து மாதங்கள் எமக்குள்ளே உனை
பொதிந்து கண்துஞ்சாமல்
காத்திருபேனடி எம் கண்மணி !!!!

கருவறை யெனும் இருட்டறையில்
எம் உயிரெனும் அகல் விளக்கேற்றுகிறேன்
அன்னையிவள் பொன் வளையல்
ஓசை கேட்டு துயில் கொள்ளடி செல்லமே !!!!

வான் நிலவு தடம் மாறி உன் கருவறையில்
குடியேறி விட்டதடி என்று நகைக்கிறார் உம் தந்தை
ஏனெனில் நீர் என்னுள் பூத்ததும்
பொன்னெடுத்து பூசியது போலே
எம் மேனியின் வண்ணம் மாறிவிட்டதாம் !!!!

எம் செல்வமே நிறமற்ற மனிதர்கள் நிறைந்திருக்கும்
உலகம் காண அச்சம் வேண்டாமடி
தன் தோள் தந்து நமை காக்க உம் தந்தை இருக்கிறார் !!!!

உனை காண தன் உயிர் பிடித்து
காத்திருக்கிறாள் உம் பாட்டி
தன் வீட்டு மஹாலக்ஷ்மி வரும் நாளை எண்ணி
கனவுகள் பல காண்கிறார் உம் தாத்தா
மரப்பாச்சி பொம்மையாய் மாறி
உன்னோடு விளையாட நானிருக்கிறேன் !!!!!

உரமிடப் படாமலே யாம் காதலுடன் காத்திருப்பது
உம் தந்தைக்காக மட்டுமல்ல உனக்காகவும் தான்
எமக்குள் நீ வராமலே உமக்காய் கவிதை
ஒன்றை எழுதிவைத்து காத்திருக்கிறாள் உம் அன்னை !!!

தாய்மையுடன்  பூங்குழலி

No comments:

Post a Comment